1885 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட ஒற்றை ரூபாய் நாணயத்துக்கு இவ்வளவு மவுசா என்று கேட்கும் அளவுக்கு ஆன்லைன் சந்தையில் ஒரே காயினுக்கு ரூ.10 கோடி கிடைத்துள்ளது.


பழைய 20 ரூபாய்க்கு இவ்வளவு மவுசா? 5 பைசா கொடுத்தா ஆயிரம் ரூபாய் கிடைக்கும் பாணியில் இதுவும் ஒரு பரபரப்புக்கான ஃபேக் நியூஸ் என்று நினைத்துவிடாம்.


1885 ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட ஒற்றை ரூபாய் நாணயம் உண்மையிலேயே இந்திய மதிப்பில் ரூபாய் 10 கோடிக்கு ஏலம் போயுள்ளது.


பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அச்சிடப்பட்ட இந்த நாணயத்தை வைத்திருந்த நபருக்கு இது லாட்டரி அடித்ததுபோல் அதிர்ஷ்டத்தைக் கொடுத்திருக்கு என்றுதான் சொல்ல வேண்டும்.


சரி உங்களிடமும் இப்படியாக பல நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் இருக்கின்றனவா? அப்படியென்றால் உங்களுக்கும் ஒரு நல் வாய்ப்பு இருக்கிறது. வீட்டில் இருந்து கொண்டே கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம்.
இதற்காக பிரத்யேகமாக பல இணையதளங்கள் இருக்கின்றன. அந்த இணையதளங்களில் நீங்கள் உங்களின் காயின்களை பட்டியலிடலாம். அதைப் பார்த்து விருப்பமுள்ளவர்கள் ஏலம் கோருவார்கள். அப்படி ஒரு இணையதளம் தான் காயின் பஜார். இந்த இணையதளத்தில் நீங்கள் உங்களுடைய அடிப்படைத் தகவல்களைப் பதிவிடவும். பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியனவற்றைப் பதிவிடவும். அப்படிப் பதிவிட்டவுடன் நாணயம் சேர்ப்பவர்கள் உங்களை நேரடியாகத் தொடர்பு கொள்வார்கள். நீங்களும் நேரடியாக ஏலம் விடலாம், பேரம் பேசலாம்,. இடைத்தரகர்கள் இல்லாததால் இந்த இணையதளத்தில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. 


அப்படித்தான் 1885 ஒரு ரூபாய் நாணயம் மூலம் ஒருவர் 10 கோடி சம்பாதித்துள்ளார். இதேபோல், கடந்த ஜூன் மாதம் 1933 ஆம் ஆண்டைச் சேர்ந்த அமெரிக்க நாணயம் 18.9 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. இந்திய மதிப்பில் ரூ.138 கோடி. நியூயார்க் நகரவாசி ஒருவர் இந்த ஏலத்தில் அந்தக் குறிப்பிட்ட அமெரிக்க நாணயத்தை இந்தப் பெருந்தொகையைக் கொடுத்து வாங்கிக் கொண்டார்.


https://coinbazzar.com/ என்ற இணையதளம் மூலம் பழைய நாணயங்களை ஏலம் விட்டு சம்பாதிக்கலாம். ஆனால், போலி நாணயங்களை விற்க முயன்றால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதைத் தெரிந்து கொள்வது நலம்.


நாணயம் சேகரிப்பு எனும் பொழுதுபோக்கு:


ஒருகாலத்தில் அரசர்களின் பொழுதுபோக்கு எனப்பட்ட நாணயச் சேகரிப்பின் புதிய வடிவம் 14 ஆம் நூற்றாண்டில் தொடங்கியது.  நாடுசார் சேகரிப்பு, ஆண்டுசார் சேகரிப்பு, அச்சக வாரியாக சேகரிப்பு, வகைசார் சேகரிப்பு, புவி-அரசியல் வாரியான நாணயச் சேகரிப்பு, இயற்கை அழகுசார் நாணயச் சேகரிப்பு, பிழையான நாணயங்களை சேகரித்தல், நினைவு நாணயங்கள் சேகரிப்பு என நாணய சேகரிப்பு பலவகைப்படுகிறது.