ப்ளிப்கார்ட் நிறுவனம் அடிக்கடி அதிரடி தள்ளுபடியை அறிவித்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகு, தற்போது மீண்டும் மிகப்பெரிய அளவில் செல்போன்களுக்கான அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது. இதற்காக ப்ளிப்கார்ட் இணையதளத்தில மொபைல் போனன்ஜா என்ற சிறப்பு பக்கத்தை தொடங்கியுள்ளது.


ஐபோன் 12 மினி, போக்கோ எம்3, மோட்டோ ஜி60 மற்றும் இன்பினிக்ஸ் ஹாட் 10 எஸ் உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்களுக்கு இந்த சலுகைகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அசத்தலான ஆபர் இன்று முதல் வரும் 23-ந் தேதி வரை நடைமுறையில் இருக்க உள்ளது. இதனால், வருகிற 5 நாட்களுக்கு ப்ளிப்கார்டில் ஐபோன் 12, ரியல்மி சி20 மற்றும் ஒப்போ எப் 19 உள்பட பல மாடல்களுக்கு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கும்.




வழக்கமான சலுகைகள் மாற்றம் தள்ளுபடிகள் தவிர்த்து ப்ளிப்கார்ட் இணையதளத்தில் எச்.டி.எப்.சி. வங்கியுடன் இணைந்து சில தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் மீது உடனடி தள்ளுபடியையும் வழங்குகிறது. மேலும், ப்ளிப்கார்ட் தளத்தில் தற்போது சந்தையில் வாங்க கிடைக்கும் சில பிரபலமான ஸ்மார்ட்போன்களின் மீது நோகாஸ்ட் இ.எம்.ஐ. விருப்பங்கள் மற்றும் எக்சேஞ்ச் சலுகைகளையும் வழங்குகிறது.


ப்ளிப்கார்டில் மொபைல் போனான்ஸா சிறப்பு திட்டத்தின் கீழ் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12 மினிமாடல் ரூபாய் 59 ஆயிரத்து 999க்கு வாங்க இயலும். இந்த போனின் அதிகாரப்பூர்வ விலை ரூபாய் 69 ஆயிரத்து 900 ஆகும். ப்ளிப்கார்டின் சிறப்பு தள்ளுபடி மூலம் ஐபோன் 12 மினி மாடல் ரூபாய் 9 ஆயிரம் குறைவாக கிடைக்கிறது.


இதேபோல, ஐபோன் எஸ்.இ. 2020 மாடல் தள்ளுபடி விலையின் கீழ் ரூபாய் 34 ஆயிரத்து 999-திற்கு விற்கப்படுகிறது. இந்த போனின் உண்மையான விலை ரூபாய் 39 ஆயிரத்து 990 ஆகும். அதேபோல, ஐபோன 11 மொபைலும் தற்போது மொபைல் போனன்சா திட்டத்தின் கீழ் கிடைக்கிறது. ரூபாய் 54 ஆயிரத்து 900க்கு விற்பனை செய்யப்படும் ஐபோன் 11-ஐ ரூபாய் 48 ஆயிரத்து 999க்கு வரும் 5 நாட்களுக்குள் வாங்கிக்கொள்ளலாம்.




இதுமட்டுமின்றி ஐபோன் எக்ஸ் ஆர் மாடலும் சலுகை விலையில் விற்கப்படுகிறது. இதன் ஆரம்ப விலை ரூபாய் 47 ஆயிரத்து 900 ஆகும். ஆனால், மொபைல் போனன்ஸா திட்டத்தின் கீழ் ரூபாய் 41 ஆயிரத்து 999க்கு விற்கப்படுகிறது. ஐபோனின் மற்றொரு ரகமான ஐபோன் 11 ப்ரோ மாடல் சந்தையில் ரூபாய் 89 ஆயிரத்து 899க்கு விற்கப்படுகிறது. ஆனால், ப்ளிப்கார்டில் அடுத்த 5 நாட்களுக்கு ரூபாய் 74 ஆயிரத்து 999க்கு விற்கப்படுகிறது.


ஐபோன் வரிசைகள் மட்டுமின்றி இதர ஆன்ட்ராய்டு போன்களும் சலுகை விலையில் விற்கப்படுகிறது. ரூபாய் 17 ஆயிரத்து 999 மதிப்புள்ள மோட்டோ ஜி 60 ஸ்மார்ட்போன் ரூபாய் 16 ஆயிரத்து 999க்கு கிடைக்கிறது. அதேபோல, இன்பினிக்ஸ் ஹாட் 10எஸ் தள்ளுபடி விலையில் ரூபாய் 9 ஆயிரத்து 499க்கு விற்கப்படுகிறது. கடந்த மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட இந்த போனின் விலை ரூபாய் 9 ஆயிரத்து 999 ஆகும்.




மேலும், இந்த ப்ளிப்கார்ட் மொபைல் போனான்ஸா விற்பனையில் ஐபோன் 12, ரியல்மி சி 20 மற்றும் ஒப்போ எப்19 உள்ளிட்ட மாடல்களுக்கு ப்ரீபெய்ட் தள்ளுபடியும் உண்டு. கூடுதலாக ரூபாய் 5 ஆயிரம் வரை எக்சேஞ்ச் தள்ளுபடிகளும் கிடைக்கும். மேலும், எச்.டி.எப்.சி. வங்கி வழியில் இ.எம்.ஐ. பரிவர்த்தனைகளைப் பயன்படுத்துவதன் மூலமாக வாடிக்கையாளர்கள் கூடுதலாக 5 சதவீத தள்ளுபடியையும் பெறலாம்.