இணையதள வளர்ச்சிக்கு பிறகு இந்தியாவில் இணையதள பணப்பரிவர்த்தனை பன்மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் ஆன்லைன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது.


போன் பே பங்குகள் சரிவு:


இந்தியாவில் செல்போன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்வதில் செயலிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதில் பேடி எம் முக்கிய செயலியாக உள்ளது. பேடி எம் செயலி நிறுவனம் கடந்த சில மாதங்களாக மோசமான நிலையில் செயல்பட்டு வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.


இந்த நிலையில், இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியது முதல் பேடிஎம்- ன் பங்குகள் சரியத் தொடங்கியது. இன்று காலை தொடங்கிய வர்த்தகத்தில் 20 சதவீதம் சரிந்து ரூபாய் 487.20 ஆக இருந்தது. அதாவது, கடந்த ஓராண்டில் (52 வாரங்களில்) பேடி எம் பங்குகள் மிகக்குறைந்த அளவை எட்டியுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 40 சதவீதம் பேடி எம் பங்குகள் சரிந்துள்ளது.


ஆர்.பி.ஐ. நடவடிக்கை:


Paytm Payments Bank Limited-க்கு எதிராக ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கை முதலே அந்த நிறுவனம் சறுக்கல்களை சந்தித்து வருகிறது. ஆர்.பி.ஐ. நடவடிக்கையை சமாளிக்க முடியும் என்று பேடி எம் கூறினாலும், ஆர்.பி.ஐ. நடவடிக்கையால் பேடி எம் செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


பொருளாதார நிபுணர்கள் பேடி எம் நிறுவனத்திற்கு எதிரான ஆர்.பி.ஐ. மேற்கொண்ட நடவடிக்கையால் 300 கோடி முதல் 500 கோடி வரை பாதிப்பு ஏற்படும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. பேடி எம் நிறுவனத்தின் சி.இ.ஓ. விஜய் சேகர் சர்மா தனது எக்ஸ் பக்கத்தில் உங்கள் அபிமான செயலி செயல்படுகிறது. பிப்ரவரி 29ம் தேதிக்கு பிறகு வழக்கம்போல செயல்படும் என்றும் பதிவிட்டிருந்தார்.


இந்தியாவில் கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் பல தரப்பு மக்களால் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வரும் சூழலில் பேடி எம் நிறுவனத்திற்கு போட்டி நிறுவனமாக உள்ளது. இந்த நிலையில் ஆர்.பி.ஐ. மேற்கொண்ட நடவடிக்கை, பங்குச்சந்தை சரிவு உள்ளிட்ட நடவடிக்கைகள் பேடி எம் நிறுவனத்திற்கு இன்னும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: Stock Market: சரிவை சந்தித்த பேடிஎம் - ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை


மேலும் படிக்க: Budget 2024: அப்படி போடு! அனைத்து அங்கன்வாடி ஊழியர்களுக்கும் ஜாக்பாட்! - அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்!