Indias Grant Loan: வெளிசந்தையில் கடன் வாங்கி அண்டை நாடுகளுக்கு இந்தியா தொடர்ந்து உதவி வருகிறது.


ரூ.14.13 லட்சம் கோடி கடன் வாங்க திட்டம்:


மத்த்ய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதில் நிதி பற்றாக்குறைய சமாளிக்க பிரமாண பத்திரங்கள் உள்ளிட்டவை மூலம், 14.13 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்க உளதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு 15.43 லட்சம் கோடி ரூபாய் கடன் வங்கியதை விட இது குறைவே ஆகும். இப்படி ஒவ்வொரு ஆண்டும் உள்நாட்டு தேவைக்கே கடன் வாங்கி வந்தாலும், அப்படி கடன் வாங்கும் தொகையை அண்டை நாடுகளின் வளர்ச்சிக்காக வழங்குவதையும் இந்தியா வாடிக்கையாக கொண்டுள்ளது. அந்த  வகையில் நேற்றைய இடைக்கால பட்ஜெட்டின் மூலம், நடப்பு நிதியாண்டில் அண்டை நாடுகளுக்கு வழங்கிய மானியம் மற்றும் கடன்கள் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன.


அண்டை நாடுகளுக்கான நிதியுதவிகள்:


அதன்படி, நடப்பு நிதியாண்டில் இதுவரை ஆப்கானிஸ்தானுக்கு 220 கோடி ரூபாய், வங்கதேசத்திற்கு 130 கோடி ரூபாய்,  பூட்டானுக்கு 784 கோடி ரூபாய், நேபாளத்திற்கு 650 கோடி ரூபாய், இலங்கைக்கு 60 கோடி ரூபாய், மாலத்தீவிற்கு 770 கோடி ரூபாய், மங்கோலியா 5 கோடி ரூபாய், மொரிஷியஷிற்கு 330 கோடி ரூபாய், மற்றும் மியான்மருக்கு 370 கோடி ரூபாய் மானியமாக இந்திய அரசு வழங்கியுள்ளது. இதுபோக, பூட்டானுக்கு ஆயிரத்து 614 கோடி ரூபாய் கடனாகவும் வழங்கியுள்ளது.


அடுத்த நிதியாண்டிற்கான திட்டம்:


அடுத்த நிதியாண்டில், “ஆப்கானிஸ்தானுக்கு 200 கோடி ரூபாய், வங்கதேசத்திற்கு 120 கோடி ரூபாய், பூட்டானுக்கு 1078 கோடி ரூபாய், இலங்கைக்கு 75 கோடி ரூபாய், மாலத்தீவிற்கு 600 கோடி ரூபாய், நேபாளத்திற்கு 700 கோடி ரூபாய், மங்கோலியா 5 கோடி ரூபாய், மொரிஷியஷிற்கு 370 கோடி ரூபாய், மற்றும் மியான்மருக்கு 250 கோடி ரூபாய் மானியமாக வழங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுபோக, பூட்டானுக்கு 989 கோடி ரூபாய் கடனாகவும் வழங்க உள்ளது.


அண்டை நாடுகளுக்கு உதவுவது ஏன்?


உள்நாட்டு வளர்ச்சி திட்டங்களுகு தேவையான நிதிக்கே பற்றாக்குறை இருப்பதால் தான், மத்திய அரசு வெளிநாடுகளில் கடன் வாங்குகிறது. அப்பட் கடன் வாங்கும் நிலையில், அண்டை நாடுகளுக்கான இந்த உதவிகள் அவசியம் தானா என்று கேட்டால், ஆம் என்பதே பதில், இந்தியா தனது நிலப்பரப்பின் எல்லையில் அமைந்துள்ள பாகிஸ்தான் மற்றும் சீனா உடனான உறவு என்பது நேர்மறையானதாக இல்லை என்பதே உண்மை. இதனால் எப்போது ஒருவிதமான பதற்றமான சூழலே நிலவுகிறது. ஆனால்,  ஆசிய கண்டத்தில் வலிமையான நாடாக உருவெடுக்க, சீனா மற்றும் பாகிஸ்தான் தவிர்த்த மற்ற அண்டை நாடுகளின் ஆதரவு அவசியம். இதன் காரண்மாகவே அண்ட நாடுகளில் மேர்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டங்களுக்கு இந்திய அரசு தொடர்ந்து உதவி செய்து வருகிறது.