இந்தியாவின் மிகப்பெரிய நிதி பரிமாற்ற தளமான பேடிஎம் பேமெண்ட்ஸ் பேங்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்தியா முழுவதும் 30 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.  பேடிஎம் வங்கி விதிமுறைகளி மீறி பணப் பரிமாற்றம் செய்தது என பல  குற்றச்சாட்டுகள் எழுந்தது.


பேடிஎம் வங்கிக்கு உத்தரவிட்ட ஆர்பிஐ:


இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அமலாக்கத்துறை பேடிஎம் பேபெண்ட்ஸ் வங்கியிடம் விசாரணையை நடத்தி வருகிறது. அதே நேரத்தில், பேடிஎம் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்திருக்கிறது. Paytm-இன் தாய் நிறுவனமான One97 Communications Ltd மற்றும் Paytm Payments Bank நிறுவனங்களின் கணக்குகள், ரிசர்வ் வங்கியால் முடக்கப்பட்டுள்ளது. 


இந்த அறிவிப்பை அடுத்து, லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  குறிப்பாக, பேடிஎம் வாலெட், பேடிஎம் பாஸ்டேக், பேடிஎம் என்எம்டிசி கார்டுகள் ஆகியவற்றை பயன்படுத்த முடியாது என்பதால் வாடிக்கையாளர்கள் வேறு தளங்களுக்கு மாற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி 29ஆம் தேதியுடன் பேடிஎம் வங்கி சேவையை நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது மார்ச் 15ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. 


ஃபாஸ்டேக்கை பயன்படுத்த முடியுமா?


இந்த நிலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட வங்களில் பாஸ்டேக் பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.  அதே நேரத்தில் அங்கீகரிப்பட்ட 32 வங்கிகளின் பட்டியலையும் வெளியிட்டிருக்கிறது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்.


அதன்படி, ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கி, அலகாபாத் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிபிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் யெஸ் வங்கி உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. 


இதில், பேடிஎம் வங்கியை தவிர்த்து, அங்கீகரிப்பட்ட வங்ககளில் புதிய ஃபாஸ்டேங்கை வாங்க  வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  பேடிஎம் வங்கி வழங்கிய ஃபாஸ்டேக் கொண்ட  வாடிக்கையாளர்கள், ஃபாஸ்டேக்கை பயன்படுத்தி, நிலுவைத் தொகை வரை கட்டணம் செலுத்த முடியும்.


மார்ச் 15ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் வங்கி வழங்கிய ஃபாஸ்டேகில் கூடுதில் நிதி அல்லது டாப் அப்கள் அனுமதிக்கப்படாது. ‘ எனவே, மார்ச் 15ஆம் தேதிக்கு முன்பு மற்றொரு வங்கியால் வழங்கப்பட்ட புதிய ஃபாஸ்டேக்கை வாங்க வேண்டும்.  மேலும், ஏற்கனவே இருந்த ஃபாஸ்டேக்கை க்ளோஸ் செய்துவிட்டு, பண்தை திரும்பப்பெற வங்கியிடம் கேட்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. 


வேறு என்னென்ன கட்டுப்பாடுகள்:


வாடிக்கையாளர் கணக்குகள், ப்ரீபெய்ட் கணக்குகள், வாலட்கள், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு உள்ளிட்டவற்றில் மேலும் டெபாசிட் செய்யவோ, பண பரிமாற்றம் செய்யவோ, டாப் அப் செய்யவோ அனுமதிக்கப்படாது. ஆனால், சேமிப்பு வங்கி கணக்குகள், நடப்புக் கணக்குகள், ப்ரீபெய்ட் கணக்குகள், வாலட்கள், பாஸ்டேக், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டு உள்ளிட்டவற்றில் ஏற்கனவே இருக்கும் பணத்தை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வங்கியின் UPI வசதியை பயன்படுத்தவும் வாடிக்கையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.