ஆன்லைன் பணப்பரிமாற்ற ஆப்பான பேடிஎம் தற்காலிகமாக முடங்கியது. இதனை அந்த நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. நிறுவனத்தின் டேட்டா நெட்வொர்க் சர்வீஸ் பகிரும் நிறுவனமான அகமாய் (Akamai) முடங்கியதால் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.


 






அக்மாய் முடங்கிய விவரத்தை பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார். 


இந்த முன்னறிவிக்கப்படாத முடக்கம் காரணமாக பேடிஎம் முடங்கியுள்ள நிலையில் பேடிஎம் செயல்பாடுகளை மீட்டுக் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 






முன்னதாக சர்வதேச செய்தி ஊடகங்களின் வலைத்தளங்கள், அரசு வலைத்தளங்கள் என அத்தனை இணையதளங்களும் ஒரு மணி நேரத்துக்கு முடங்கின. அமெரிக்க க்ளவுட் கம்ப்யூட்டிங் நிறுவனமான ஃபாஸ்ட்லி இடந்த முடக்கத்துக்குப் பொறுப்பேற்றுக்கொண்டது.இந்த முடக்கத்தால் ரெட்டிட், அமேசான், சி.என்.என், பேபால், ஸ்பாட்டிஃபை, அல்ஜஸீரா, நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட நிறுவன வலைத்தளங்கள் முடக்கத்தைச் சந்தித்ததாக டவுன்டிடக்டர்.காம்(Downdetector.com) கண்டறிந்தது. இதையடுத்து ஃபாஸ்ட்லி(Fastly) இணையதளத்தில் பிரச்னை இருக்கலாம் என அது சொன்னது. சில நிமிடங்கள் தொடங்கி ஒரு மணிநேரம் வரை நீடித்த இந்த முடக்கம் பிறகு சரிசெய்யப்பட்டுவிட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.






சர்வதேச வலைத்தள வழங்கு நிறுவனமான (Content Network provider) ஃபாஸ்ட்லி ‘இந்த முடக்கத்துக்கு காரணமாக பிரச்னை கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டுவிட்டது.இருந்தாலும் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பியிருப்பதால் பயனாளர்களின் பழைய தகவல்கள் அதிகம் பதிவேற்றமடைய வாய்ப்புள்ளது’ எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. பிரான்சின் லே மண்டே (Le Monde) செய்தித்தாள் நிறுவனத்தின் பக்கத்தில் தளத்தில் பிழை இருப்பதற்கான அறிவிப்பு வந்தது (Error Messages). பிரிட்டனின் பிரபல செய்தி நிறுவனமான கார்டியனின் வலைத்தளம் மற்றும் செயலி இரண்டுமே இதனால் பாதிக்கப்பட்டது. பிற பிரிட்டன் செய்தி ஊடக நிறுவனங்களும் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டன.