அமெரிக்காவில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட முடி பராமரிப்பு தயாரிப்புகளை P&G திரும்பப்பெறுகிறது.
ப்ராக்டர் & கேம்பிள் நிறுவனம் (P&G) புற்றுநோயை உண்டாக்கும் ஏஜென்ட் பென்சீன் இருப்பதால் அமெரிக்காவில் 30-க்கும் மேற்பட்ட முடி பராமரிப்பு தயாரிப்புகளை திரும்பப் பெற்றுள்ளது. திரும்பப் பெறப்பட்ட தயாரிப்புகளில் பான்டீன், ஹெர்பல் எசன்ஸ், ஓல்ட் ஸ்பைஸ் மற்றும் பிற பிராண்டுகளின் உலர் கண்டிஷனர் மற்றும் உலர் ஷாம்பு ஸ்ப்ரேக்கள் அடங்கும். அந்த தயாரிப்புகளில் புற்றுநோயை உண்டாக்கும் பொருளாக பென்சீன் இருக்கலாம் என்று எச்சரித்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், பென்சீனின் வெளிப்பாடு லுகீமியா, எலும்பு மஜ்ஜை இரத்த புற்றுநோய் மற்றும் இரத்தக் கோளாறுகளை ஏற்படுத்தும் என ஆய்வுகள் தெரிவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பொருட்களில் வகைப்படுத்தப்பட்ட பான்டீன், ஹெர்பல் எசன்ஸ், ஹேர் ஃபுட், ஓல்ட் ஸ்பைஸ் மற்றும் ஆஸ்திரேலிய தயாரிப்புகள் ஆகியவை அடங்கும். ஒரு மாதத்திற்குள் இரண்டாவது முறையாக பி&ஜி திரும்பப்பெற்றுள்ளது. திரும்பப் பெறப்பட்ட தயாரிப்புகளின் முழுப் பட்டியல் நிறுவனத்தின் இணையதளத்தில் கிடைக்கிறது.
பாதிக்கப்பட்ட தயாரிப்புகள் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் அளவுக்கு அதிகமான பென்சீன் அளவை மக்களுக்கு வெளிப்படுத்தாது என்று P&G ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், பென்சீனின் வெளிப்பாடு உள்ளிழுப்பதன் மூலமும், வாய்வழியாக மற்றும் தோல் வழியாகவும் ஏற்படலாம். மேலும் இது லுகீமியா மற்றும் எலும்பு மஜ்ஜையின் இரத்த புற்றுநோய் மற்றும் உயிருக்கு ஆபத்தான இரத்தக் கோளாறுகள் உள்ளிட்ட புற்றுநோய்களை ஏற்படுத்தும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. திரும்பப் பெற்றப்பட்ட பொருட்களை அலமாரிகளில் இருந்து அகற்றுமாறு சில்லறை விற்பனையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
P&G (PG) அமெரிக்கா முழுவதிலும் உள்ள கடைகளிலும், ஆன்லைனில் விற்கப்பட்ட பாதிக்கப்பட்ட தயாரிப்புகளை வாங்கியவர்கள், அவற்றை தூக்கி எறிய வேண்டும் என்று விரும்புகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் படிவத்தை நிரப்பலாம் அல்லது 1-888-674-36319 திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஹாட்லைனைத் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் P&G ஒரு டஜன் ஓல்ட் ஸ்பைஸ் மற்றும் சீக்ரெட்-பிராண்டட் ஏரோசல் டியோடரண்டுகள் மற்றும் ஸ்ப்ரேக்களுக்கு இதேபோல் திரும்பப்பெற்றது குறிப்பிடத்தக்கது. தயாரிப்புகளில் பென்சீனும் இருக்கலாம் என்று எச்சரித்தது. கடந்த ஜூலையில், ஜான்சன் & ஜான்சன் சில ஸ்ப்ரே-ஆன் நியூட்ரோஜெனா மற்றும் ஏவினோ சன்ஸ்கிரீன்கள் தயாரிப்புகளில் குறைந்த அளவு புற்றுநோயைக் கண்டறிந்த பிறகு திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்