100 ரூபாய் சம்பாதித்தால் அதில் ரூ.35 வரிகள் நிமித்தமாக அரசுக்கு கொடுக்க வேண்டியுள்ளது என பார்தி ஏர்டெல் தொலைதொடர்பு நிறுவனத் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார். சுனில் மிட்டல் முதலீட்டாளர்கள் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போது இதனைத் தெரிவித்தார். 


அவர் பேசியதாவது:


ஏஜிஆர், ஸ்பெக்ட்ரம் தொடர்பான செலவினங்கள் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு பெரும் சுமையாக உள்ளன. 100 ரூபாய் சம்பாதித்தால் அதில் 35 ரூபாய் அரசுக்கு செல்கிறது


5ஜி சேவைக்கான ஏல அறிவிப்பானது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். அப்படி நடந்தால், 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் 5ஜி சேவை மக்களுக்குக் கிடைக்கும் என நம்புகிறோம்.


இந்த நிதியாண்டில் ஏர்டெல்  பார்தி நிறுவனம் ரூ.200 ஏஆர்பியு கிடைக்க வேண்டும் என்று இலக்கு கொண்டுள்ளது.  
சேவைக் கட்டணங்களை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். ஆனால், இதில் மிகச்சிறிய அடிகளைத் தான் முன்னெடுத்து வைக்க வேண்டும். அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. 5ஜி சேவைகளின் கட்டணம் மிகவும் கவர்ச்சிகரமானதாக இருக்கும். 5ஜி சேவை கொண்ட செல்போன்களின் விலையும் குறைந்து வருகிறது.





ஏர்டெல் தற்போது ரூ.21 ஆயிரம் கோடி அளவில் நிதி ஆதாரம் பெரும் முயற்சியில் உள்ளது. இது 5ஜி சேவை, ஃபைபர் சேவை, டேடா சென்டர் பிசினஸ் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்யும் சூழல் அதிகரிக்கும். 


ஏர்டெல், புதிய டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளது. நாங்கள் தொலைதொடர்பு துறையில் இந்தியாவின் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவுவோம்.


முதலீட்டை அதிகரிப்பது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு, அடுத்த மைல்கல்லை எட்டுவதற்கு, மிகப்பெரிய சவாலான வாய்ப்புகளைக் கையாள வழி செய்யும்.


தொலைதொடர்பு நிறுவனத்தின் ஒரு வாடிக்கையாளர் அடிப்படையிலான வருவாய் (Average Revenue Per User) என்பது மாதத்துக்கு ரூ.200 என அதிகரிக்கலாம். அதுவே, இந்த நிதியாண்டின் கடைசியில் ரூ.300 ஆக அதிகரிக்கலாம்.


ஏர்டெல் நிறுவனம் அதன் உரிமைப்பங்கு வெளியீடு மூலம் 21,000 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. உரிமத்தின் விலை ரூ.535 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு ஈக்விட்டி ஷேருக்கு 14 ஈக்விட்டி ஷேர் என்ற வீதத்தில் உரிமங்களின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது, முகமதிப்பு 5 ரூபாய்க்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திரட்டப்படும் நிதியின் மூலம் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை செலுத்த திட்டமிட்டுள்ளோம்.

பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் ப்ரோமோட்டர் பங்கு 55.8% என்றும் மக்களின் பங்கு 44.09% என்றளவிலும் உள்ளது.


தொலைத்தொடர்பு துறையில் முதலீடுகளை தடுக்கும் வகையில், சில அழுத்தங்கள் உள்ளன. அந்தப் பிரச்சனைகளைக்கு தீர்வு காணுமாறு,  அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகிறோம்.


இவ்வாறு சுனிம் மிட்டல் பேசினார்.