ஷாக் கொடுத்த வாளி விலை..


அமேசான் , ஃபிளிப்கார்ட் போன்ற இணையதள வர்த்தக செயலிகளில் கிடைக்காத பொருட்களே கிடையாது. மாட்டுச்சாணம் மூலம் கிடைக்கும் வரட்டி முதல் ஐபோன் வரை அத்தனையையும் அழகாக பேக் செய்து வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள். சில ஆடம்பர பொருட்களின் விலைகள் அதிகமாக இருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பக்கெட்டின் விலையை , மொபைலின் விலைக்கு இணையாக விற்பனை செய்து வருகிறது அமேசான். ஒருவேளை வெள்ளியால் செய்யப்பட்டிருக்கலாமோ என எண்ண வேண்டாம் . அது நாம் குளிக்க பயன்படுத்தும் சாதாரண பிளாஸ்டிக் பக்கெட்தான்.


ஆறு பக்கெட் அடங்கிய செட்டாக கிடைக்குமாம் . அதன் விலை ₹25,999 மட்டுமே! அதுவும்  28 சதவிகிதம் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதே போல சில குளியலுக்கு பயன்படுத்தும் குவளைகளின் விலையில் தாறுமாறாக இருக்கிறது. மார்கெட்டுகளில் 10 ரூபாய் முதல் 100 ரூபாய்க்குள் கிடைக்கும் குளியல் குவளைகள் அமேசானில் 10,000 ரூபாய் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் குளியல் குவளையின் விலை ரூ.22,080 ஆனால் 55 சதவீத தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதால் ரூ.9,914 என்ற விலைக்கு கிடைப்பதுதான். EMI வசதிகளும் உண்டு!




ஏன் இப்படி?


இந்த மாதிரி பிழைகளுக்கும் அமேசான் , ஃபிளிப்கார்ட் போன்ற வர்த்தக தளங்களுக்கும் எவ்விதம் தொடர்பும் கிடையாது என்பதுதான் உண்மை. அவை வாடிக்கையாளருக்கும் விற்பனையாளருக்கும் இடையில் ஒரு மீடியமாகத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும் . அதே நேரம் மேற்கண்ட பிழைகள் இரண்டு வழியில் நடக்க வாய்ப்பிருக்கிறது. முதலில்  விற்பனையாளர்கள் தங்களின் பொருட்கள் குறித்த விவரங்களை பதிவிடும் பொழுது சில தொழில்நுட்ப பிரச்சனை அல்லது மறதியின் காரணமாக விலைகளை மாற்றி பதிவிட்டிருக்கலாம். அல்லது ஏமாற்றும் நோக்கத்தில் , ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் நோக்கில் இதனை செய்திருக்கலாம். பக்கெட் விலை குறித்த ஷாக்கிங் செய்தியை டிவிட்டர் தளத்தில்  விவேக் ராஜு என்பவர்  முதலில் பகிர்ந்திருக்கிறார்.


 ஸ்கிரீன் ஷார்ட் ..


வாளியின் புகைப்படத்தை விலையோடு ஸ்கிரீன் ஷார்ட் எடுத்த அந்த நபர் ”இதை நான் கண்டுபிடிச்சுட்டேன்..ஆனால் என்ன பண்ணுறதுனு தெரியல “ என கேப்ஷன் கொடுத்து ஷேர் செய்திருந்தார். அதன் பிறகு சொல்லவா வேண்டும் . இதே போல பலரும் சோப் , குளியல் குவளை என அனைத்தையும் தங்களின் பங்கிற்கு பகிர தொடங்கிவிட்டனர். 


 






 


என்னதான் இது வேடிக்கையாக இருந்தாலும் ! இந்த பொருட்களுக்கு இவ்வளவுதான் விலை நிர்ணயிக்க வேண்டும் என சில வரையறையை அமேசான் போன்ற நிறுவனங்கள் கொண்டு வந்தால்  நல்லாயிருக்கும்!