இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 412.82 அல்லது 0. 57% புள்ளிகள் உயர்ந்து 72,821.83 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 120.75 அல்லது 0.58% புள்ளிகள்உயர்ந்து 22,168.60 ஆக வர்த்தகமாகியது.
அமெரிக்க பெடரல் ரிசர்வ் முன்கூட்டியே வட்டி விகிதம் பற்றிய அறிவிப்பு வெளியானதால் ஐ.டி. துறை சரிவை சந்தித்தது. இருப்பினும்,பிற துறைகளில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் கவனம் செலுத்துவதால் இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டது. நிஃப்டி 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. சென்செக்ஸ் 81.55 உயர்ந்து 72,708.16 ஆகவும் நிஃப்டி 81.60 புள்ளிகள் உயர்ந்து 22,122.30 ஆகவும் வர்த்தகமானது.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..
க்ரேசியம், பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஆட்டோ, சிளா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பாரதி ஏர்டெல், டாகடர். ரெட்டீஸ் லேப்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், சன் பார்மா, அதானி எண்டர்பிரைசிஸ், டைட்டன் கம்பெனி, நெஸ்லே, ரிலையன்ஸ், மாருதி சுசூகி, பவர்கிரிட் கார்ப், எஸ்.பி.ஐ. டெக் மஹிந்திராம் பிரிட்டானியா, அதானி போர்ட்ஸ், ஜெ.எஸ்.டபுள்யு ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..
கோல் இந்தியா, லார்சன், விப்ரோ, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஹீரோ மோட்டர்கார்ப், இந்தஸ்லேண்ட் வங்கி, ஈச்சர் மோட்டர்ஸ், ஹிண்டால்கோ,டாடா மோட்டர்ஸ், டி.சி.எஸ்., ஆக்சிஸ் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா ஸ்டீல், கோடாக் மஹிந்திரா வங்கி, டிவிஸ் லேப்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், இன்ஃபோசிஸ், ஓ.என்.ஜி.சி. ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.