Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் நிறைவடந்துள்ளது.
வார இறுதியில் வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 457.07 அல்லது 0.70 % புள்ளிகள் உயர்ந்து 64,794.27 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 143.60 அல்லது 0.73 % புள்ளிகள் சரிந்து 19,243.10 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.
பஜார்ஜ் ஃபின்சர்வ், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜார்ஸ் ஃபினான்ஸ், ஓ.என்.ஜி.சி., பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின. டாக்டர். ரெட்டீஸ் லேப்ஸ், அதானி போர்ட்ஸ், ஜெ.எஸ்.டபுள்யூ. ஸ்டீல், லார்சன் அண்ட் டர்போ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.
லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
பஜார்ஜ் ஃபின்சர்வ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஓ.என்.ஜி.சி., பாரதி ஏர்டெல், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஆக்சிஸ் வங்கி, டைட்டன் கம்பெனி, ஈச்சர் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின.
நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்
லார்சன், டாக்டர், ரெட்டி லேப்ஸ், ஜெ.எஸ்.டபுள்யு,, அதானி போர்ட்ஸ், அதானி எண்டர்பிரைசிஸ், இந்தஸ்லேண்ட் வங்கி, பவர்கிரிட் கார்ப், ஐ.டி.சி., டாடா மோட்டர்ஸ், ஹிண்டால்கோ, அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், சன் ஃபார்மா, டெக் மகேந்திரா, டாடா ஸ்டீல், விப்ரோ, டிவிஸ் லேப்ஸ், ரிலையன்ஸ், சிப்ளா, பஜாஜ் ஆட்டோ, கோல் இந்தியா, மாருதி சுசூகி, ஹீரோ மோட்டர்கார்ப், இன்ஃபோசிஸ், கோடாக் மகேந்திரா, டி.சி.ஸ்.,பிரிட்டானியா, நெஸ்லே ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.
இன்று (25/08/2023) காலை வர்த்தக நேர தொடங்கியவுடன் சென்செக்ஸ் 160 புள்ளிகள் சரிந்து 65 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமானது. கொஞ்சம் நேரத்திற்கு பிறகு, 400 புள்ளிகள் வரை குறைந்தது. மதியம் வர்த்தக நேர முடிவில் 64 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமாகியது. கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாக 65 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தகமாகிவந்த நிலையில், இன்று 64 ஆயிரம் புள்ளிகளாக உள்ளது. சன் நெட்வொர்க் லிமிடெட் பங்குகளில் மதிப்பு 4 சதவீதம் உயர்ந்தது. 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை நிலையற்றதன்மையில் வர்த்தகமானது. 1,446 பங்குகளின் மதிப்பு அதிகரித்து இருந்தன. 2079 பங்குகளின் மதிப்பு சரிவுடன் வர்த்தகமானது. 110 பங்குகளின் மதிப்பு மாற்றமின்றை தொடர்ந்தது.
இந்திய ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82.65-ஆக இருந்தது.
ரூபாய் மதிப்பு சரிவுடனேயே வர்த்தகமானது. டாலர் மதிப்பு உயர்ந்திருந்தது. இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 7.8% ஆக இருக்கும் கணிக்கப்பட்டுள்ளது. இது முன்னதாக 6.1% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. வரும் வாரங்களில் USDINR 82.80 - 82.40 ஆக வர்த்தகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.