சமீப காலங்களில் உலகத்தில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மிகவும் பயன்படுத்தப்படுவது கிரிப்டோகரன்சிதான். பிட்காயின், டாக்காயின் போன்ற பல வகை கிரிப்டோ கரன்சிகள் தற்போது புழக்கத்தில் உள்ளன. இந்தியாவில் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை மத்திய அரசு இன்னும் அங்கீகரிக்கவில்லை. எனினும் அமெரிக்க, சீனா போன்ற நாடுகளில் கிரிப்டோகரன்சி அதிகளவில் புழக்கத்தில் உள்ளது. அந்தவகையில் டாக்காயின் கிரிப்டோ கரன்சியின் மதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. 


அதன்படி காயின்கேக்கோ என்ற தளத்தின் தரவுகளின் தற்போது அமெரிக்க பங்குச் சந்தையில் டாக்காயினின் மதிப்பு 550 மில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது.  டாக்காயின் என்பது கடந்த 2013-ஆம் ஆண்டு விளையாட்டாக தொடங்கப்பட்டது. இதை உருவாக்கியவர் கூட அவரிடம் இருந்த மொத்த காயின்களையும் விற்றுள்ளார். அதன் பின்னர் மிகவும் மதிப்பு இழந்து காணப்பட்ட டாக்காயின் தற்போது பிரபலங்கள் சிலரின் வர்த்தகத்தால் மீண்டும் மதிப்புப்பெற தொடங்கியுள்ளது. இந்தாண்டின் தொடக்கத்தில் 95 பில்லியனாக இருந்தது. 


அதன்பின்னர் சற்று சரிவை கண்ட இந்த டாக்காயின் மீண்டும் ஏற தொடங்கியுள்ளது. குறிப்பாக எலோன் மஸ்க் சமீபத்தில் ட்விட்டரில் டாக்காயின் என்ற கிரிப்டோ கரன்சிக்கு வெளிப்படையாக தனது ஆதரவை அளித்துள்ளார். உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒருவர் இதற்கு அளித்துள்ளது பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த டாக்காயினின் மதிப்பு ஏற இதுவும் ஒரு காரணமாக கருதப்படுகிறது. உலகளவில் 17 பில்லியன் டாக்காயின்கள் தற்போது புழக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டாக்காயினை உருவாக்கியவர் அதில் 55 சதவிகித பங்குகளை வைத்துள்ளார். 




இந்தியாவை பொறுத்தவரை இதுவரை கிரிப்டோகரன்சிக்கு தடை எதுவும் விதிக்கப்படவில்லை. கிரிப்டோகரன்சி பெரும்பாலும் ஹேக்கர்கள் அதிகம் பயன்படுத்தி வருவதால் இதனை பயன்படுத்துவது தொடர்பாக இந்திய அரசு இன்னும் பரிசீலிக்கவில்லை. எனினும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை இந்தியாவில் சட்டரீதியில் முறை படுத்தப்படவில்லை. எனவே இந்தியாவில் பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளின் பயன்பாடு மிகவும் குறைந்தே காணப்படுவது குறிப்பிடத்தக்கது. 


எனினும் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் கிரிப்டோகரன்சி பயன்பாடு மிகவும் அதிகரித்துவருகிறது. கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை விரும்பும் ஆர்வலர்கள் சிலர் ரிசர்வ் வங்கி சார்பில் ஒரு கிரிப்டோகரன்சி அறிமுகப்படுத்தி இந்தியாவில் பரிவர்த்தனை செய்யவேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு விரைவில் தனது கொள்கை முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்தியாவில் இந்த கிரிப்டோ கரன்சி தொடர்பான பல மொபைல் செயலிகள் செயல்பட்டு தான் வருகின்றன. அதற்கும் இன்னும் அரசு தடை எதுவும் விதிக்கவில்லை. 


மேலும் படிக்க: பெண் குழந்தைகள் வைத்திருப்பவரா...? திருமணம், கல்விக்கு எல்ஐசி.,யின் அசத்தல் திட்டம்!