Dhan Sanchay  (தன் சஞ்சய்) என்ற புதிய எல்ஐசி திட்டத்தின் கீழ் பாலிசிதாரர் ரூ.22 லட்சம் வரை பலன் பெற முடியும். இத்திட்டத்தில், அவசரத் தேவைக்கு பாலிசி தொகையில் இருந்து கடன் பெற்றுக் கொள்ளு முடியும். பாலிசி காலத்துக்கு ஏற்ப, 3 வயது முதல் இத்திட்டத்தில் சேர முடியும்.


இன்சூரன்ஸ் என்றாலே நமக்கெல்லாம் முதலில் நினைவுக்கு வருவது எல்ஐசி தான். காரணம் அதன் நம்பகத்தனமை. எல்ஐசி பல அற்புதமான திட்டங்களை மக்களுக்காக கொடுத்து வருகின்றது.  குழந்தைகள், பெரியோர், மாணவர்கள், திருமண வயதினர், மருத்துவம், ஓய்வுக்காலம் என பல தரப்பினருக்கும், பல்வேறுபட்ட தேவைகளுக்கும் அவ்வப்போது நல்ல திட்டங்களை வழங்கி வருகிறது. இதனால், இந்திய மக்களில் பெரும்பாலானோர் எல்ஐசியின் நூற்றுக் கணக்கான பாலிஸி திட்டங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்திருப்பார்கள். அப்படி ஏதும் இதுவரை தேர்வு செய்திராவிட்டால் நீங்கள் எல்ஐசி தஞ் சஞ்சய் திட்டத்தை முயற்சித்துப் பார்க்கலாம் எனக் கூறுகின்றனர் காப்பீட்டுத் துறை நிபுணர்கள்.


தன் சஞ்சய் பாலிசி என்றால் என்ன? 


எல்ஐசி தன் சஞ்சய் பாலிசி என்பது பங்குச்சந்தையுடன் இணைக்கப்படாத தனிநபர் சேமிப்பு காப்பீட்டுத் திட்டம். இதில் பாதுகாப்புக்கும், சேமிப்பிறகும் ஒருசேர வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது பாலிசிதாரர் அகால மரணமடைந்தால் அவரது குடும்பத்திற்கு சிறந்த நிதி ஆதாரமாக அமைகிறது. அதேபோல் பாலிசி முதிர்ச்சியடைந்த காலத்தில் இருந்து உத்தரவாத பணத்தையும் தருகிறது.




தன் சஞ்சய் சிறப்பு அம்சங்கள் என்ன?


தன் சஞ்சய் திட்டத்தில், பாலிசி காலத்துக்கு ஏற்ப, 3 வயது முதலே சேர முடியும்.


அவசரத் தேவைக்கு பாலிசி தொகையில் இருந்து கடன் பெற்றுக் கொள்ளலாம்.


 முதிர்வு காலத்தில் உத்தரவாதமான வருவாய் வழங்குகிறது.


குறைந்தது 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரையில் இந்த பாலிசியை எடுக்கலாம். 


ப்ரீமியம் தொகய ஒரே தவணையாகவும் கட்டலாம் இல்லையென்றால் நம் வசதிக்கு ஏற்ப தவணை முறையிலும் கட்டலாம்.


பாலிசிதாரரின் திடீர் மரணத்திற்குப் பின்னர் அவரது குடும்பத்திற்கு கிடைக்கும் தொகையிலும் சில சலுகைகள் இருக்கிறது. நாமினியாக நியமிக்கப்பட்டிருப்பவர் அதனை ஒரே தவணையாகவும் பெற்றுக் கொள்ளலாம். இல்லாவிட்டால் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையாகவும் பெற்றுக் கொள்ளலாம்.


எப்படிச் சேர்வது?


தன் சஞ்சய் பாலிசி மட்டுமல்ல வேறு எந்த பாலிசியாக இருந்தாலும், எல்ஐசி முகவர்கள் மூலமோ, கிளைகள் மூலமோ, சேவை மையங்கள் மூலமோ இந்த பாலிசி திட்டத்தில் சேர முடியும். www.licindia.in என்ற இணையதளம் மூலமும், இந்த பாலிசி திட்டத்தில் சேரலாம்.