“தேசிய மின்னணு பணப்பரிவரத்தனை எனப்படும் NEFT-இல் தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக மே 23 அன்று 14 மணிநேரம் செயல்படாது எனவும் அதற்கேற்றால் பணபரிவர்த்தனையை மாற்றிக்கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.“ தேசிய மின்னணு பரிவர்த்தனை எனப்படும் NEFT மூலம் 24 மணிநேரமும் அரைமணி நேரத்தில் பணத்தினை செலுத்தக்கூடிய வசதிகள்  பயனாளர்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்  காரணமாகவே தற்போது தேசிய அளவில் தனிநபர்கள், நிறுவன அமைப்புகள், குழுமங்கள் ஏதாவது ஒரு வங்கியின் கிளையிலிருந்து மற்றொரு வங்கியிலுள்ள தனிநபர், நிறுவன அமைப்பு, குழுமங்களின் கணக்கிற்கு மின்னணு முறையில் எளிதில் பணத்தினை அனுப்ப தேசிய மின்னணு பரிவர்த்தனையை பயன்படுத்துகின்றனர்.


இதன் மூலம் பணத்தை மாற்றுவதற்கு IFSC குறியீடு, பயனாளியின் பெயர், பணம் மாற்றவேண்டிய நபரின் பெயர் மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு பணத்தினை அனுப்பினால் அரைமணி நேரத்தில் பயனாளர்களுக்கு பணம் பெறுவதற்கான வசதிகள் இதில் உள்ளது. NEFT-ஐப் பயன்படுத்தி பணத்தை அனுப்புவதில் குறைந்தபட்சம் அல்லது அதிகபட்சம் என்று எந்த வரம்பும் கிடையாது. ஆயினும் வங்கியில் கணக்கு வைக்காத வாடிக்கையாளர்கள் (கே.எண் 4 மற்றும் 5-இல் குறிப்பிட்டது போல்) இந்திய – நேபாள பண அனுப்புதல் திட்டத்தின்கீழ் பணம் அனுப்புபவர் உட்பட அனுப்பும் பணத்திற்கு அதிகபட்ச உச்சவரம்பு ரூ.49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



குறிப்பாக NEFT-ஐப் பயன்படுத்தி வாரநாட்களில் ஒரு நாளைக்கு 11 தடவைகளாக காலை 9 மணிமுதல் 7 மணிவரையிலும், சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் 1மணி வரை 5 தடவைகளாகவும் பரிவர்த்தனைகள் செய்யப்படும் வசதிகள் உள்ளது. எனவே அதிகளவிலான மக்கள் தற்போது தேசிய மின்னணு பணபரிவர்த்தனை முறையினை பின்பற்றிவருகின்றனர். இந்த நிலையில் தான் NEFT ல் தொழில்நுட்ப மேம்படுத்துதல் மேற்கொள்வதன் காரணமாக  இதன் சேவை மே 23 ஆம் தேதி 12 மணி முதல் மதியம் 2 வரை அதாவது தொடர்ந்து 14 மணிநேரம் செயல்படாது என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.



எனவே வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் கட்டண நடவடிக்கைகளை அதற்கேற்ப திட்டமிட வலியுறுத்துமாறு வங்கிகளுக்கு ஆர்பிஐ கூறியுள்ளது. மேலும் காலகட்டத்தில் ஆர்டிஜிஎஸ் அமைப்பு வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு  தொழில் நுட்ப மேம்படுத்துதல் திறன் முடிவடைந்தவுடன் அதற்கேற்ப அப்டேட்டுடன் பயனாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆர்டிஜிஎஸ் லும் ( Real Time GrossSettlement) தொழில்நுட்ப திறனை மேம்படுத்தும் நடவடிக்கை கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.