ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்டில் பல கோடி மோசடி: 2 நிதி மேலாளர்கள் இடைநீக்கம்
ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட்டில் பல கோடி மோசடி காரணமாக அந்நிறுவனத்தின் நிதி மேலாளர்கள் இருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆக்சிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைச் சேர்ந்த 2 நிதி மேலாளர்கள் ஃபிரண்ட் ரன்னிங் Front Running என்னும் மோசடியில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தவர்கள் மிகுந்த கவலையில் உள்ளனர். மோசடி தொடர்பான ஃபிரண்ட் ரன்னிங் Front Running என்றால் என்ன என்பது குறித்து காண்போம்
ஃபிரண்ட் ரன்னிங் (Front Running)
பங்குகள் குறித்த தகவல்களை முன்கூட்டியே மற்றவர்களுக்கு பகிர்வதாகவும். சற்று விளக்கமாக கூறுவதென்றால், நிதி மேலாளர்கள் எந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பது தொடர்பான தகவல்களை தெரிந்து வைத்திருப்பார். அந்த தகவல்களை அந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் ஆராய்ந்து நிதி மேலாளருக்கு வழங்குவார்கள். அதனடிப்படையில் நிதி மேலாளர் முடிவெடுப்பார். ஆனால் அந்த தகவல்களை உறவினர்களுக்கோ, பணம் வாங்கி கொண்டு மற்றவர்களுக்கோ இந்த தகவல்களை பகிரும் போது, அவர்கள் குறைந்த மதிப்பில் முதலீடு செய்து, அதிக லாபம் அடைவார்கள். இதனால் முதலீட்டாளர்கள் ஆரம்ப நிலையில் கிடைக்க பெறக்கூடிய லாபம் தவிர்க்கப்படுகிறது.இது தான் ஃபிரண்ட் ரன்னிங் (Front Running) மோசடி
இடைநீக்கம்
ஃபிரண்ட் ரன்னிங் Front Running மோசடி தொடர்பாக 2 நிதி மேலாளர்கள் மீது, கடந்த பிப்ரவரி மீது விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் 2 நிதி மேலாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவரும் தகவலை பரிமாறிய நிறுவனத்திடமிருந்து பல கோடி ரூபாய் பெற்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.மேலும் இந்நிறுவனத்தின் நிறுவனர் சந்திரேஷ் நிகமும் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:
Axis consumption, Axis Banking, Axis Nifty, Axis Technology,Axis Arbitrage Fund,Axis Quant Fund ஆகிய 7 நிறுவனங்களில் முதலீடு செய்தவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.மேலும் மோசடி காரணமாக எந்த முடிவையும் உடனடியாக எடுக்க வேண்டாம். மேலும் உங்கள் நிதி ஆலோசகரிடம் உரிய வழிகாட்டுதல் பெற்று முடிவு எடுக்கவும்.