Stock Market: இன்றைய நாள் வர்த்தக நேர முடிவில் மும்பை சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிந்து வர்த்தகமானது.
சரிவில் பங்குச் சந்தை:
உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் பல்வேறு தாக்கத்தின் காரணமாக பங்கு சந்தை பெரும் சரிவை சந்தித்தது. மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் புள்ளியானது, இன்றைய நாள் வர்த்தக நேர முடிவில் 1062 புள்ளிகள் குறைந்து 72,404 புள்ளிகளில் வர்த்தகமானது. அதாவது சென்செக்ஸ் 1. 45 சதவிகிதம் சரிந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி புள்ளியானது, இன்றைய நாள் வர்த்தக நேர முடிவில் 345 புள்ளிகள் குறைந்து 21, 957 புள்ளிகளில் வர்த்தகமானது. அதாவது, நிஃப்டி புள்ளியானது 1.50 சதவிகிதம் குறைந்தது.
சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 25 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் நிறைவடைந்தன. நிஃப்டியில் உள்ள 50 நிறுவனங்களில் 43 நிறுவனங்களின் பங்குகளும் சரிவுடன் நிறைவடைந்தன.
எல் & டி 5.6 சதவிகிதம் விலை குறைந்தது. ஓ.என்.ஜி.எஸ்.சி, ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், டிவிஸ் லேப், ஸ்ரீராம் பைனான்ஸ் ஆகியவற்றின் பங்குகளின் விலையானது 3 சதவிகிதத்திற்கும் கீழ் குறைந்தது.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளில் 865 பங்குகள் ஏற்றம் கண்டன, 2,394 பங்குகள் சரிவுடன் முடிவடைந்தன, 102 பங்குகள் மாறாமல் இருந்தன.
பங்குச் சந்தை தாக்கம்:
- மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழ்நிலையில், தேர்தலின் முடிவுகளில் தாக்கம் இருக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, பங்குச் சந்தையானது நிச்சயமற்ற தன்மையுடன் இருந்து வருவதை காண முடிகிறது.
- மேலும் நான்காவது காலாண்டின் மந்தமான முடிவுகளும் , கச்சா எண்ணெய் விலையின் அதிகரிப்பு போன்ற காரணிகளும் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என பங்குச் சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக மிகவும் ஏற்றத்துடன் சென்று கொண்டிருந்த மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளின் குறியீடுகளானது, மே 2 ஆம் தேதியிலிருந்து ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
Also Read: Airtel - Sun NXT: ஏர்டெலுடன் கைக்கோர்த்த SUN NXT...இலவசமாக 4,000 திரைப்படங்கள்...எப்படி பயன்பெறுவது?