கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் குடிநீர் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


 




 


கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சூடாமணி ஊராட்சி மல்லநத்தம், சின்னதாராபுரம், டி.வெங்கிடாபுரம், புலியம்பட்டி, க.பரமத்தி ஆகிய கிராம ஊராட்சி பகுதிகளில் குடிநீர் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் காவிரி குடிநீர் விநியோகம் தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். சூடாமணி ஊராட்சி எல்லமேடு அருகில் சூடாமணி ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட கோடைகால தண்ணீர் பந்தல் மாவட்ட ஆட்சித் தலைவரால் திறந்து வைக்கப்பட்டது. இதில் பொது மக்களுக்கு மோர் மற்றும் ஓ. ஆர். எஸ் கரைசல் தொடர்ச்சியாக வழங்கிட மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார். பின்பு சூடாமணி ஊராட்சியில் மல்ல நத்தம் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 95 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீட்டிக்க தொட்டியிலிருந்து ஊராட்சியின் இதர கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் குடிநீர் விநியோகம் ஆய்வு செய்யப்பட்டது.


 




 


இதில் குடிநீர் விநியோகம் செய்யப்படாத ஐந்து மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு இரண்டு தினங்களில் குடிநீர் ஏற்ற உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார். அடுத்ததாக சின்னதாராபுரம் டி. வெங்கடாபுரம் மற்றும் புளியம்பட்டி குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்கத் தொட்டியிலிருந்து (சம்ப்) ஊராட்சியின் இதர கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு செல்லும் குடிநீர் விநியோகத்தினை ஆய்வு செய்தார். இதில் ஊராட்சி மன்றத் தலைவரால் தெரிவிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்படாத நான்கு பகுதிகளுக்கு சனிக்கிழமைக்குள் உடனடியாக குடிநீர் விநியோகம் செய்திட  செயற்பொறியாளர் அவர்களுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து கா. பரமத்தி ஊராட்சியில் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஏழு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்தேக்கத் தொட்டியிலிருந்து (சம்ப்) ஊராட்சியின் இதர குக்கராமங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் குடிநீர் விநியோகத்தினை ஆய்வு செய்தார்.


 




 


இதில் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பொது மக்களால் தெரிவிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யாத பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்திட இரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்க உதவி செயற்பொறியாளர் மற்றும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் கா.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து குக்கிராமங்களிலும் உடனடியாக பைப் லைன் அமைத்து போர்க்கால அடிப்படையில் பணிகளை முடித்திட குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்திடவும், அதனை தனிக்குழு அமைத்து கண்காணித்திடவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்  ஶ்ரீலேகா தமிழ்செல்வி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் வீராச்சாமி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சரவணன், உதவி பொறியாளர்  மரியாதேவி, மற்றும் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.