தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் மராத்தி மொழிகளில் 4000 க்கும் மேற்பட்ட திரைப்பட தலைப்புகளையும் 30,000+ மணி நேர டிவி உள்ளடக்கத்தையும் கொண்ட சன் NXT-ன் பயன்பாடுகளை இப்போது ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பயனர்கள் அனுபவித்து மகிழலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர்டெல் எக்ஸ்ட்ரீர்ம் ப்ளே:
இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான ஏர்டெல், ஏர்டெல் எக்ஸ்ட்ரீர்ம் ப்ளே ( Airtel Xtreme Play ) தளத்தின் பெயரில் ( APP + Website ) திரைப்படங்கள் மற்றும் காட்சி தொடர்களை வழங்கி வருகிறது. இதில் சிறப்பான விசயம் என்னவென்றால், ஏர்டெல் சேவை வாடிக்கையாளர்கள் இலவசமாக இத்தளத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.
இத்தளத்தில், சோனி , ஆஹா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களில் உள்ள படங்களை பார்க்கலாம். . இந்நிலையில், தற்போது சன் NXT இணைந்துள்ளது. இதையடுத்து சன் NXT உள்ள 4,000 படங்களை இலவசமாக பார்க்கும் வகையிலான வசதி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் , இது தொடர்பாக பாரதி ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இந்தியாவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட பணம்செலுத்திய சந்தாதாரர்களைக் கொண்டு வேகமாக வளர்ந்துவரும் OTT சேவையான ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே, சன் டிவி நெட்வொர்க் லிமிடெடின் ஒரு முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான சன் NXT இன் பங்காளராகி இருப்பதை, இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் (“ஏர்டெல்”) தெரிவிக்கிறது.
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் வாடிக்கையாளர்கள் இப்போது சன் NXT இன் 50,000+ மணி நேர உள்ளடக்கத்தை அனுபவித்து மகிழலாம். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், பங்ளா மற்றும் மராத்தி போன்ற பல மொழிகளில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள், சிறந்த தொடர்கள், டிவி ஷோக்கள், லைவ் டிவி, குழந்தைகள் நிகழ்வுகள் போன்ற பிரபலமான காட்சிகள் அடங்கும். ஏர்டெல் எக்ஸ்ட்ரீமில் பயனர்கள் 23 ஓடிடி-களில் இருந்து உள்ளடக்கங்களைக் கண்டு மகிழலாம். இந்தியாவில் ஒரே ஆப்-பில் மிக அதிக அளவிலான OTT உள்ளடக்கங்கள் சேர்ந்து கிடைக்கும் ஆப்-களில் இதுவும் ஒன்றாகும்.
ஒரே ஆப், ஒரே சந்தா, ஒரே உள்நுழைவு ஆகிய தனித்துவமான அம்சங்களை இது வழங்குகிறது. மொபைல்கள், டேப்லெட்டுகள், லேப்டாப்புகளில் ஆகியற்றில் ஆப் அல்லது வலைத்தளம் மூலமும் பெரிய திரைகளிலும் பயனர்கள் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளேயை அணுகலாம்.
ஏர்டெலுடன் கைக்கோர்த்த ஓடிடி-கள்:
சோனி LIV, லய்ன்ஸ்கேட் பிளே, சௌபல், ஹோய்சோய், ஃபேன்கோட், மனோரமாமேக்ஸ், ஷெமரூமி, ஆல்ட் பாலாஜி, அல்ட்ரா, ஈரோஸ்நவ், எப்பிகான், டாக்குபே மற்றும் பிளேஃபிளிக்ஸை உள்ளடக்கிய பல ஆப்-கள் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளேயில் அடங்கியுள்ளன என ஏர்டெல் தெரிவித்துள்ளது.