கடந்த ஜூன் மாதத்தில் பங்குச்சந்தை கடுமையான சரிவை சந்தித்தது. கடந்த மாதத்தில் பங்குச்சந்தையில் பாதி பங்குகளின் விலை சரிவுடன் வர்த்தகமாகியதாக Bloomberg இதழின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்குகளின் விலை 55 சதவீதம் குறைவாக இருந்ததாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 305 பங்குகளில் 28 சதவீத பங்குகள் மட்டுமே அதிக விலைக்கு வர்த்தகமானது; 17 சதவீத பங்குகள் எவ்வித மாற்றமும் இன்றி வர்த்தகமானது.
மெட்டல் மற்றும் மினரல் நிறுவனங்களின் பங்குகளின் விலை கடுமையாக சரிந்தது. ஸ்பெஸ் ஹிண்டால்கோ (space-Hindalco) டாடா ஸ்டீல் ( Tata Steel) மற்றும் National Mineral Development Corporation நிறுவனம் ஆகியவற்றின் பங்குகளின் விலை 9-10 சதவீதம் குறைந்து விற்பனையானது.
கடந்த மாதம் மிகவும் குறைந்த விலை விற்பனையான நிறுனங்களின் பங்குகள், இந்தியா சிமெண்ட்ஸ், ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஆகிய இரு நிறுவனங்கள்தான்.
தற்போது சிமெண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புக்கு அதிக விலை கொடுக்க வேண்டியாதாக இருப்பதாகவும், ஆனால் விலை உயர்வு இதுவரை இல்லை எனவும், சந்தையில் தேவை குறைந்துள்ளதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளன.
ரஷ்யா- உன்ரைன் போர் உள்ளிட்ட பல காரணங்களால் கடந்த மாதத்தில் பங்குச்சந்தைகள் வரலாறு காணத அளவு சரிவை சந்தித்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்