உலர் திராட்சை (Raisins) :


இந்தியர்களில் இனிப்புகளில் உலர் திராட்சை அதாவது கிஸ்மிஸ் பழங்களின் பங்கு முக்கியமானது. இனிப்புகளை அலங்கரிக்க சில பயன்படுத்தினாலும் கூட  சாலட்டுகளில் கூடுதல் சுவைக்காக சிலர் இதனை பயன்படுத்துவார்கள் . உலர் திராட்சையை நம் வீட்டு பாயசம் , லட்டுகளில் நீங்கள் அதிகம் பார்த்திருக்கலாம் . அதிகமாக வட இந்தியர்கள் இதனை சாப்பிடுவார்கள் . உடலுக்கு ஆரோக்கியமானதுதான் . அதே நேரத்தில் அளவாக சாப்பிட வேண்டும். ஏனென்றால் இது அதிக அளவு கொழுப்பு மற்றும் சர்க்கரையை கொண்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவ ஊட்டச்சத்து நிபுணர் ஷிவிகா காந்தி ஆனந்த்,  உலர் திராட்சையை தவறாமல் சாப்பிடுவது எப்படி நமக்கு உதவும் என்பதைப்  தனது இன்ஸ்டாகிராம் பகிர்ந்துள்ளார்.


 







உலர் திராட்சையின் நன்மைகள் :


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: 


இந்த திராட்சையில் வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இவை இரண்டும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் . மேலும் தொற்று மற்றும் வைரஸ்களின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவுகிறது.


2. தூக்கத்தை மேம்படுத்துகிறது: 


திராட்சையில் மெலடோனின் என்ற ஹார்மோன் உள்ளது, இது தூக்கம்-விழிப்பு சுழற்சியை முறையாக கட்டுப்படுத்த உதவுகிறது. நீங்கள் தூக்கமின்மையால் அவதிப்பட்டாலோ அல்லது  குறைவான நேரம் மட்டுமே  உறங்குபவராக இருந்தாலோ, உறங்கும் முன் ஒரு சில திராட்சைகளை உட்கொள்வது உங்களுக்கு  உதவியாக இருக்கும்.





 3. செரிமானத்திற்கு உதவுகிறது: 


உலர் திராட்சையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அவை மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வயிறு உப்புதல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும் எனவே, உங்கள் செரிமான அமைப்புக்கு சிறிது நிவாரணம் அளிக்க அவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள்.



4.  பொட்டாசியம் அதிகம் :


உலர் திராட்சையும் பொட்டாசியம் அதிகம் கொண்ட உணவாக அறியப்படுகிறது, இது நம் உடலில் உள்ள உப்பு உள்ளடக்கத்தை சமன் செய்யும்  அதே போல‌இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்குகிறது.



5.வெயிட் லாஸ் :


நீங்கள் உடல்  எடையைக் குறைக்கும் டயட்டில் இருந்தால், அதிகப்படியான கொழுப்பைத் தவிர்க்க விரும்பினால்,  திராட்சையை இரவு முழுவதும் தண்ணீரில்  தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுங்கள் . நிச்சயம் சர்க்கரைக்கு மாற்றாகவுமிருக்கும் .