மோரிஷ் கெராஜ் (எம்ஜி) இந்தியா


போர்டு இந்தியா மூடப்படுவதை தொடர்ந்து ஆட்டோமொபைல் துறை குறித்து பலரும் விவாதித்து வருகின்றன. சென்னையில் உள்ள போர்டு ஆலை மிகப்பெரியது. இந்த ஆலையை வாங்குவதற்கு எம்.ஜி. மோட்டார் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துதாக செய்திகள் வெளியானது. போர்டு ஆலையை வாங்கும் எம்.ஜி மோட்டார் பெரியதாக என பலரும் கருதுகின்றனர்.


அமெரிக்காவுல போர்டு எப்படியோ அதுபோல இங்கிலாந்துக்கு எம்ஜி என மீம் டெம்பிளேட் போதும் எம்.ஜி. மோட்டார்ஸை புரிந்துகொள்ளவேண்டும்


1924-ம் ஆண்டு


மோரிஸ் கெராஜ் நிறுவனம் நூற்றாண்டை நெருங்கி வருகிறது. 1924-ம் ஆண்டு இங்கிலாந்தில் தொடங்கப்பட்ட நிறுவனம். ஆரம்பத்தில் இரு இருக்கைகள் கொண்ட ஸ்போர்ட்ஸ் கார்களை மட்டுமே தயாரித்துவந்து. 1921-ம் கார் விற்பனை நிறுவனமாக இருந்தது. அதனை தொடர்ந்து சொந்தமாக கார் தயாரித்து விற்பனை செய்தது.


சுதந்திரத்துக்கு முன்பு இந்த நிறுவனத்தின் கார்கள் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது. தற்போது கூட எங்கேயாவது விண்டேஜ் கார் கண்காட்சி நடந்தால் எம்.ஜி நிறுவனத்தின் கார் இருப்பதை பார்க்கமுடியும். சென்னையில் இந்த கார் வைத்திருந்தவர்களும் அதிகம்.


ஆனால் இந்த நிறுவனம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு குழுமத்தின் வசம் இருந்திருக்கிறது. பிரிட்டீஷ் மோட்டார் கார்ப்பரேஷன், பிரிட்டிஷ் லேலண்ட் உள்ளிட்ட குழுமங்களிடம் இருந்தது. 2000-ம் ஆண்டு ரோவர் குழுமத்துடன் இணைந்தது. 2007-ம் ஆண்டு சீனாவை சேர்ந்த எஸ்.ஐ.ஏசி (Shanghai Automotive Industry Corporation) நிறுவனம் வாங்கியது. சர்வதேச அளவில் மிக முக்கிய ஆட்டோமொபைல் நிறுவனம் இது.




2017ம் ஆண்டு இந்தியாவில்..


ஜெனரல் மோட்டார்ஸ் இந்தியாவில் இருந்து வெளியேறியது. அதே ஆண்டில் இந்தியாவில் நுழைந்தது எம்.ஜி. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் குஜராத் ஹாலல் ஆலையை 2017-ம் ஆண்டு வாங்கியது. அப்போது ரூ.2000 கோடி அளவுக்கு முதலீடு செய்தது.


2019-ம் ஆண்டு முதல் காரை அறிமுகம் செய்தது. தற்போது மூன்று முக்கியமான கார்கள் மட்டுமே உள்ளன. ஹெக்டர் என்பது முக்கியமான மாடல். இதுதவிர ஒரு எலெக்ட்ரிக் வாகனமும் உள்ளது. இதுதவிர gloster என்னும் சொகுசு காரும் இருக்கிறது. ஏற்கெனவே 3000 கோடி ரூபாய் முதலீடு செய்துவிட்ட நிலையில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் மேலும் ரூ.2500 கோடி ரூபாய் முதலீடு செய்ய எம்.ஜி. மோட்டார் இந்தியா திட்டமிட்டிருக்கிறது. இதுதவிர நடுத்தர எஸ்.யு.வி பிரிவில் ஆஸ்டர் என்னும் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. இது இல்லாமல் மேலும் இரு கார்களையும் விரைவில் எம்ஜி அறிமுகம் செய்ய இருக்கிறது.


எம்.ஜி நிறுவனத்தின் விற்பனை தொடங்குவதற்கு முன்பு முன்பதிவு தொடங்கியது. முன்பதிவுக்கு நல்ல வரவேற்பு இருந்தது 30,000க்கும் மேற்பட்ட கார்களுக்கு முன்பதிவு நடந்தது.


தற்போது குஜராத்தில் உள்ள ஆலையில் ஒரு மாதம் 4500 வாகனங்களை தயாரிக்கும் திறன் இருக்கிறது. ஆனால் தற்போது மூலப்பொருட்கள் பற்றாக்குறை, சிப் பற்றாக்குறை, பொருட்களின் விலையேற்றம் ஆகிய காரணங்களால் மாதம் 3500 முதல் 4000 வாகனங்களை மட்டுமே தயாரிக்கிறது. மூலப்பொருள் உற்பத்தி சரியாக இருந்தால் உற்பத்தியை உயர்த்தமுடியும். மேலும்  அடுத்த ஆண்டு ஒரு மாதம் 7000 வாகனங்களை தயாரிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்திருக்கிறது. புதிய மாடல்கள் வரத் தொடங்கும்போது உற்பத்தியும் உயரும். சிப் பற்றாக்குறையை பொருத்தவரை குறைந்தபட்சம் ஆறு மாதத்துக்காவது இந்த பற்றாக்குறை இருக்கும் என நிறுவனம் கணித்திருக்கிறது.




கடந்த நிதி ஆண்டில் (2020-2021) 28000க்கும் மேற்பட்ட வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. மாருதி மற்றும் ஹூண்டாய் ஆகிய இரு பெரும் நிறுவனங்கள் பெரும் சந்தையை வைத்திருக்கும் சூழலில், மூன்று மாடல்களை வைத்துக்கொண்டு இரண்டே ஆண்டுகளில் 1.3 சதவீத சந்தையை எம்.ஜி. பிடித்திருக்கிறது.


கியா நிறுவனம் செல்டாஸ் என்னும் எஸ்.யு.வி மாடலை முன்னிலை படுத்தியே இந்திய சந்தையை பிடித்தது. குறுகிய காலத்தில் ஐந்து சதவீதத்துக்கு மேலான சந்தையை கியா பிடித்திருக்கிறது. இதேபோல எஸ்.யூ.வி. மாடல்களை மையமாக கொண்டே களம் இறங்குகிறது எம்ஜி. அதேபோல வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவிலும் கவனம் செலுத்துகிறது எம்ஜி.




இந்த நிலையில்தான் போர்டு நிறுவனத்தின் ஆலையை வாங்குவதற்காக எம்.ஜியின் (மஹிந்திரா மற்றும் ஓலா ஆகிய நிறுவனங்களும் ஆரம்பகட்ட பேச்சு வார்த்தையில் உள்ளதாக தெரிகிறது) முயற்சி கவனம்பெறுகிறது. இந்திய ஆட்டோமொபைல் துறையில் மேற்குலக நாடுகள் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. மாறாக ஹூண்டாய், கியா, டொயோடா கிழக்கு உலக நாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த பட்டியலில் எம்.ஜி. இணையுமா? இன்னும் சில ஆண்டுகளில் இதற்கான விடை தெரிந்துவிடும்.


Car loan Information:

Calculate Car Loan EMI