கடந்த அக்டோபர் 22ஆம் தேதி நடைபெற்ற பூஜா பம்ப்பர் மற்றும் அதற்கு முன்னதாக மே மாதம் நடந்த சம்மர் பம்ப்பர் ஆகிய இரண்டுக்குமான முதல் பரிசு டிக்கெட்டுகளை ஒரே லாட்டரி முகவர் விற்பனை செய்துள்ளது ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாலக்காட்டைச் சேர்ந்த சுரேஷ் என்பவர், கிங் ஸ்டார் என்ற பெயரில் லாட்டரி மையத்தை நடத்தி வருகிறார். இவரிடம் டிக்கெட்டை வாங்கிய நபர்களே, பூஜா பம்ப்பர் லாட்டரியிலும் சம்மர் பம்ப்பர் லாட்டரியிலும் முதல் பரிசை அள்ளிச் சென்றுள்ளனர்.
சேலத்தைச் சேர்ந்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்
சம்ம்பர் பம்ப்பரில் முதல் பரிசாக ரூ.10 கோடி அளிக்கப்பட்ட நிலையில், பூஜா பம்ப்பரில் முதல் பரிசாக ரூ.12 கோடி அளிக்கப்பட்டது. சம்மர் லாட்டரியை சேலத்தைச் சேர்ந்த நபர் தட்டிச் சென்றார். இவர் கேரளாவில் தனலட்சுமி என்ற பெயரில் 120 டிக்கெட்டுகளை வாங்கியுள்ளார்.
இந்த நிலையில், இந்த பூஜா பம்ப்பரை பாலக்காட்டைச் சேர்ந்த உள்ளூர்வாசியே வாங்கிச் சென்றிருப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
POOJA BUMPER BR-106 லாட்டரியில் ரூ.12 கோடி முதல் பரிசுக்கான அதிர்ஷ்ட எண்:
JD 545542 (பாலக்காடு)
முகவர் பெயர்: எஸ் சுரேஷ்
நிறுவன எண்: P 2267
ரூ.1 கோடி 2வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்:
JA 838734
JB 124349
JC 385583
JD 676775
JE 553135
ரூ.50 லட்சம் 3வது பரிசிற்கான அதிர்ஷ்ட எண்கள்:
JA 399845
JB 661634
JC 175464
JD 549209
JE 264942
JA 369495
JB 556571
JC 732838
JD 354656
JE 824957
ஆகிய நபர்கள் பரிசுகளைக் குவித்தனர். இந்த நிலையில் இரு லாட்டரிக்கான முதல் பரிசுகளையுமே ஒருவரே விற்பனை செய்தது குறித்து, செய்தி ஊடகங்களிடம் சம்பந்தப்பட்ட லாட்டரி மைய நிறுவனர் சுரேஷ் பேசினார். அவர் கூறும்போது, ’’3 வாரத்துக்கு முன்பு இந்த டிக்கெட்டை விற்பனை செய்தேன். பாலக்காட்டைச் சேர்ந்த நபர்தான் வாங்கி இருப்பார் என்று நினைக்கிறேன்.
மகிழ்ச்சி வெள்ளத்தில் சுரேஷ்
தொடர்ச்சியாக அடுத்தடுத்த லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து, முதல் பரிசு பெற்றுக் கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
லாட்டரி டிக்கெட்டை விற்பனை செய்பவருக்கு ஏஜெண்ட் கமிஷன் 30 சதவீதம் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.