ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீ லிமிடட் (RIL) மற்றும் ரிலையன்ஸ் பிபி மொபிலிட்டி லிமிடட் கூட்டாக இணைந்து ஜியோ பிபி மொபிலிட்டி ஸ்டேஷனை தொடங்கியுள்ளது. முதல் ஸ்டேஷன் மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் நவ்டே எனுமிடத்தில் தொடங்கப்பட்டுள்ளது.


கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே ஜியோ பிபி, உலகத் தரம் வாய்ந்த மொபிலிட்டி ஸ்டேஷன்களை வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் தொடங்கியுள்ளது.
ரிலையன்ஸுக்கு தற்போது நாடு முழுவதும் 1400 ஃப்யூவல் பம்ப்புகள் உள்ளன. இவை அனைத்துமே இனி Jio-bp என ரீப்ராண்ட் செய்யப்படும்.


இந்தியாவின் எரிபொருள் தேவை நாளுக்கு நாளுக்கு வேகமாக அதிகரித்து வருகிறது. உலகிலேயே அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியா தான் எரிபொருள் தேவையிருக்கும் சந்தைகளில் மிக வேகமாக வளரும் நாடாக இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. 


மேம்படுத்தப்பட்ட எரிபொருள்கள், EV அதாவது இ வாகங்களுக்கான சார்ஜிங் பாயின்ட், உணவு மற்றும் கேளிக்கை என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் கொடுக்க நினைக்கிறது.


ரிலையன்ஸ் இந்திய சந்தையில் மிகவும் விசாலமான தொழிலைக் கொண்டுள்ளது. தனது செல்வாக்கையும் அனுபவத்தையும் தற்போது கூட்டு முயற்சியாக இந்த மொபிலிட்டி ஸ்டேஷனில் முதலீடு செய்துள்ளது. பிபி உலகளவில் உயர் தர எரிபொருள், வித்தியாசமான எரிபொருள், லூப்ரிகன்ட்ஸ் என தனக்கென ஒரு தனி முத்திரை வைத்துள்ளது. இப்போது இந்த இரண்டும் கூட்டு முயற்சியாக ஜியோ பிபி மொபிலிட்டி ஸ்டேஷனை கையில் எடுத்துள்ளது.
ஜியோ பிபி மொபிலிட்டி ஸ்டேஷன்களில் வழக்கமான எரிபொருளைத் தாண்டி வித்தியாசமான எரிபொருள் கிடைக்கும். மேம்படுத்தப்பட்ட இந்த எரிபொருளை மக்கள் மற்ற எரிபொருள் விலையிலேயே பெறலாம். இதில் சர்வதேசம் அங்கீகாரம் பெற்ற ஆக்டிவ் டெக்னாலஜி (‘ACTIVE’ technology) இருக்கும். அதனால், இன்ஜின் மற்றும் உதிரி பாகங்களில் ஒருவித பாதுகாப்புப் படலம் உருவாகும்.


ஜியோ பிபி மொபிலிட்டி ஸ்டேஷனில், மின்சார வாகன சார்ஜிங் ஸ்டேஷன் மற்றும் பேட்டரி ஸ்வாப் ஸ்டேஷன்களும் இருக்கும். இதன் மூலம் இந்தியாவில் இவி சார்ஜிங் கட்டமைப்பை உருவாக்குவதில் ரிலையன்ஸ் முன்னணி நிறுவனமாக முடிவு செய்துள்ளது.


Wild Bean Caféவுடன் ஒரு புரிந்துணர்வு செய்துள்ளது. அதன்படி, 24x7 கஃபேவை உருவாக்க முடிவு செய்துள்ளது.  Wild Bean Café பிபி நிறுவனத்தின் சர்வதேச பிராண்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே உள்ளூர் சிறப்பான மசாலா சாய், சமோசா, உப்புமா, பனீர் டிக்கா ரோல், சாக்கலேட் லாவா கேக் ஆகியனவும் கிடைக்கும் கூடவே அதன் தனிச்சிறப்பான காஃபியும் கிடைக்கும்.


காஸ்ட்ரால் நிறுவனத்துடன் போட்டுள்ள ஒப்பந்தத்தின்படி ஜியோ பிபி மொபிலிட்டி ஸ்டேஷனில், எஸ்க்பிரஸ் ஆயில் சேஞ் அவுட்லெட்டுகளும் இங்கே இருக்கும். இங்கே ஆயில் மாற்றிக் கொள்ளும் டூவிலர் ஓட்டுநர்கள், அதற்கான சர்வீஸ் கட்டணம் இல்லாமல் இலவசமாக ஆயில் மாற்றிக் கொள்ளலாம்.
ஜியோ பிபி மொபிலிட்டி ஸ்டேஷனில், வாடிக்கையாளர்களின் பணத்துக்கு முழு தரமும், அளவும் உறுதியளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எல்லா ஜியோ பிபி மொபிலிட்டி ஸ்டேஷனிலும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்படும்