கடந்த மாதம் குஜராத்தைச் சேர்ந்த தொழில் நிறுவனம் ஒன்றில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமான "கணக்கில் வராத" பணம் கிடைத்துள்ளது என்று CBDT நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தது.


தொழில் நிறுவனத்தில் ரெய்டு


இதுவரை கணக்கில் வராத ரூ.24 கோடி பணம் மற்றும் ரூ.20 கோடி மதிப்பிலான தங்க நகைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கெடா, அகமதாபாத், மும்பை, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய 58 கிளைகள் கொண்ட இந்த நிறுவனத்தில் கடந்த ஜூலை 20ஆம் தேதி ரெய்டு தொடங்கியது. இந்த தொழில் நிறுவனம் ஜவுளி, இரசாயனங்கள், பேக்கேஜிங், ரியல் எஸ்டேட் மற்றும் கல்வி ஆகிய பன்முகப்படுத்தப்பட்ட துறைகளில் ஈடுபட்டுள்ளது என்று அதன் பெயரை குறிப்பிடாமல் CBDT தெரிவித்துள்ளது.



மிகப்பெரிய மோசடி


மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) என்பது வரித் துறையின் நிர்வாக அதிகாரமாகும். சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் தரவுகள், கணக்கில் வராத விற்பனை, போலிக் கொள்முதல் மற்றும் பண ரசீதுகள் உள்ளிட்ட பல்வேறு முறைகளை பின்பற்றி இந்த குழுமம் மிகப்பெரிய அளவிலான வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.


தொடர்புடைய செய்திகள் : மீண்டும் ஒரு போரா? தைவானில் கால்பதித்த நான்சி பெலோசி! சீறும் சீனா.. உச்சக்கட்ட பதற்றம்..


சராஃபி


கொல்கத்தாவை இயங்கு தளமாகக் கொண்ட ஷெல் நிறுவனங்களின் பங்கு பிரீமியம் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட கணக்கில் காட்டப்படாத பணத்திலும் இந்த நிறுவனத்திற்கு பங்கு உள்ளது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 'சராஃபி' (பாதுகாப்பற்ற) எனப்படும் முன்பணங்கள் மூலம் உருவாக்கப்பட்ட, கணக்கில் காட்டப்படாத வருமானத்தின் சில செயல்களும் கண்டறியப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



எப்படி மோசடி செய்கிறார்கள்?


இந்த தொழில் நிறுவனமானது ஆப்ரேட்டர்கள் வைத்து மற்ற நிறுவனங்களின் பங்கு விலைகளைக் கையாளுவதன் மூலம் லாபம் ஈட்டுவதில் ஈடுபட்டுள்ளது. தனிப்பட்ட பயன்பாட்டிற்காக, கற்பனையான நிறுவனங்கள் மூலம் நிதியை மோசடி செய்துள்ளதை கைப்பற்றப்பட்ட தரவுகள் சுட்டிக்காட்டுகிறது. இது கூட்டமைப்பின் பொது வரையறுக்கப்பட்ட நிறுவனங்களின் கணக்கு புத்தகங்களில் "கையாளுதல்" செய்யப்படுவது என்று குறிப்பிட்டுள்ளதாக கண்டறியப்பட்டது என்று CBDT தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.