stock market: சரிவுடன் தொடங்கி சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச் சந்தைகள்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கி சரிவுடன் முடிவடைந்தன

Continues below advertisement

இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கி சரிவுடன் முடிவடைந்தன.

Continues below advertisement

இந்நிலையில்,மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 5215.26 புள்ளிகள் குறைந்து 60,906.09 ஆக புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 62.55 புள்ளிகள் குறைந்து 18,082.85 புள்ளிகளாக உள்ளது.

 

இன்று காலை தொடங்கிய மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 140.05 புள்ளிகள் குறைந்து 60,980.85 ஆக புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 36 புள்ளிகள் குறைந்து 18,109.40 புள்ளிகளாக இருந்தது.

ஃபெடரல் வங்கி:

அமெரிக்க மத்திய வங்கியின் அலுவல் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. நேற்று அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் முடிவடைந்த நிலையில், கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்த வாய்ப்பு இருக்கும். அதனால் இந்திய பங்குச் சந்தை இன்று சரிவுடன் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் உயருமா வட்டி விகிதம்?

மேலும், உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ரஷ்யா - உக்ரைன் போர், கொரோனா தொற்று காரணமாக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. இதனால் உலகளவில் பணவீக்கம் அதிகரித்தது. இதையடுத்து, சில மாதங்களுக்கு முன்பு பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, அமெரிக்காவின் மத்திய வட்டி விகிதத்தை உயர்த்தியது.

இதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலரும் இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து வெளியேறினர். இந்நிலையில் இன்று பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கி இருப்பதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியுடன் உள்ளனர்.

தற்போது சீனாவில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கச்சா எண்ணெய் தேவையானது உலகளவில் குறைய வாய்ப்புள்ளதால், கச்சா எண்ணெய்யின் விலை குறையும் சூழல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபெடரல் வங்கி:

அமெரிக்க மத்திய வங்கியின் அலுவல் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. நேற்று அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் முடிவடைந்த நிலையில், கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்த வாய்ப்பு இருக்கும். அதனால் இந்திய பங்குச் சந்தை இன்று சரிவுடன் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 19 காசுகள் குறைந்து 82.78 என்ற அளவில் உள்ளது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola