மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 153 புள்ளிகள் அதிகரித்து 60,989.41 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி-50, 55.3 புள்ளிகள் அதிகரித்து 18,108 புள்ளிகளாக உள்ளது.
லாபம்- நஷ்டம்
ரிலையன்ஸ், மாருதி சுசுகி, கனரா வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. டிசிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன
பங்கு சந்தை மீதான தாக்கம்
பணவீக்கத்தை கட்டுப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி நேற்று ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையில், வட்டி விகிதத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வால்,இந்திய பங்கு சந்தை சரிவை கண்டது. ஆனால், தற்போது மீண்டும் ஏற்றம் கண்டுள்ளன.
ஆனால் பங்குகள் தொடர்ந்து ஏற்றம் காணுமா என்பது கேள்விக்குறிதான். ஏனென்றால் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி உயர்வால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், இந்திய பங்கு சந்தையிலிருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.