நடிகர் கார்த்தி நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தின் போது சுவாரஸ்மான சம்பவங்களை அப்படத்தின் இயக்குநர் ராஜேஷ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.


கடந்த 2013 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று நடிகர் கார்த்தி, நடிகை காஜல் அகர்வால், சந்தானம், பிரபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான படம் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’. தமன் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறியதால் படுதோல்வி அடைந்தது,.


உள்ளூரில் கேபிள் தொலைக்காட்சி நடத்தி வரும் கார்த்தி லட்சியம் ஒன்றின் காரணமாக திருமணம் செய்துக் கொள்ளாமல் இருப்பார். ஒரு திருமணத்தில் காஜல் அகர்வாலை பார்த்ததும் காதல் கொள்வார். ஆனால் கார்த்தியின் அப்பா பிரபு இந்த திருமணத்திற்கு மறுப்பார். அது ஏன் என்பதை காமெடி கலந்து சொல்லியிருப்பார்கள். இதில் பிரபுவுக்கு பிளாஸ்பேக் காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். அதில் இளம் வயது பிரபுவாக கார்த்தியே நடித்து பிரபுவின் மேனரிசங்களை சூப்பராக வெளிப்படுத்தியிருப்பார். இந்த படம் வந்து நேற்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 






இதனிடையே சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான  ஆல் இன் ஆல் அழகுராஜா படம் எதிர்பாராத தோல்வியை கொடுத்தது. இதற்கிடையில் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள ராஜேஷ், இப்படம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை தெரிவித்துள்ளார். அதன்படி அழகுராஜா படம் பண்றதுக்கு முன்னாடி நானும், கார்த்தியும் வேறு ஒரு கதையில் இணைவதாக இருந்தது. அந்த சமயம் அவருக்கு சிறுத்தை படம் வெளியாகி மாஸ் ஹீரோவாக உருவாகியிருந்தார். இதனால் நம்முடைய கதை எளிதாக இருக்கக்கூடாது என நினைத்திருந்தேன். 


சிறுத்தைக்குப் பின் கார்த்தி அலெக்ஸ்பாண்டியன் படம் நடித்து வந்தார். அதன்பின்னரே அழகுராஜா படம் தயாரானது. இதனால் கதையை மாற்றி 80களின் காலக்கட்டத்தில் நடக்கும் காட்சிகளை இணைத்தேன். இன்றைக்கு வரை காஜல் அகர்வால் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் நடித்த காட்சிகள் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்தின் காட்சிகள் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு முறையும் கார்த்தி எனக்கு மெசெஜ் செய்வார். சார் இப்ப வந்து படம் நல்லாருக்குன்னு சொல்றாங்க சார். 


படம் வெளியான நாளில் அஜித் நடித்த ஆரம்பம் படமும் வெளியாகியிருந்தது. அன்னைக்கு இருந்த சூழ்நிலை காரணமாகவே ஆல் இன் ஆல் அழகுராஜா படம் சரியாக போகவில்லை. ஆனால் இப்ப பாக்குறப்ப சில விஷயங்கள் இன்னும் நல்லா பண்ணியிருக்கலாமோன்னு தோணும். கார்த்தி இப்படத்தை என்ஜாய் பண்ணி  நடித்தார்.