சரக்கு மற்றும் சேவை வரி (Goods and services tax (GST)) மூலம் கடந்த செப்டம்பர் மாதத்தில் ரூ.1.73 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ. 1.62 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 6.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.75 லட்சம் கோடியாக இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஒப்பிடும்போது இந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் வசூல் சற்று குறைந்துள்ளது.
இதே செப்டம்பர் மாதத்தில் கடந்த ஆண்டு ஜி.எஸ்.டி. ரூ.1.53 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டிருந்தது. செப்டம்பர் மாச வசூல் கடந்த ஆண்டைவிட 4 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் உள்ளூர் வருவாய் 5.9 சதவீத உயர்ந்து 1.27 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது. இறக்குமதி செய்யப்பட்டதற்கான ஜி.எஸ்.டி. வரி வசூல் 8 சதவீதம் அதிகரித்து ரூ.45,390 ஐ எட்டியுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி, ஐஜிஎஸ்டி மற்றும் செஸ் ஆகிய வரிகளின் மூலம் கிடைத்த வசூலும் அதிகரித்துள்ளது. 2024-ல் இதுவரை வசூலான மொத்த ஜிஎஸ்டி 10.9 லட்சம் கோடி. இதுகடந்த ஆண்டை விட 9.5 சதவீதம் அதிகமாகும்.
கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.9.9 லட்சம் கோடி வசூலானது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் ரூ.2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் கிடைத்துள்ளது. 2023 - 2024 நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி ரூ. 20.18 லட்சம் கோடி. இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 11.7% அதிகமாகும்.
இந்தாண்டு ஆகஸ்ட் மாத ஜி.எஸ்.டி. வசூல் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்து 962 கோடியாக இருந்தது. 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1,59,069 கோடி ஆக இருந்தது.