மகாத்மா காந்தியின் 155 வது பிறந்தநாளை முன்னிட்டு சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் விழிப்புணர்வு பாதயாத்திரை சேலத்தில் இன்று நடைபெற்றது. சேலம் பிரபாத் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்ட மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான கே.வி.தங்கபாலு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து மத நல்லிணக்க பாதயாத்திரை பிரபாத் பகுதியில் துவங்கி, திருச்சி பிரதான சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலை அருகே நிறைவடைந்தது. பின்னர் மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாஸ்கர், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



பின்னர் முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.வி.தங்கபாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட ராகுல் காந்தி வலியுறுத்துகிறார். பூரண மதுவிலக்கு வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். காங்கிரஸின் மூலாதான கொள்கைகளில் ஒன்று ஒரு மது விளக்கு. அது தமிழ்நாட்டிலே காமராஜர் தலைமையில் நடைபெற்றது. மீண்டும் இந்த நிலை வர வேண்டும் என நாங்கள் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம். மது விளக்கு என்பது விதிவிலக்காக மாறும். மக்கள் அனைவரும் நன்றாக வாழ்வதற்கு நாங்கள் இதனை வலியுறுத்துகிறோம்.


அதற்காகத்தான் நாங்கள் பாதயாத்திரை, போராட்டம், பேரணி என அனைத்தையும் நடத்துகிறோம். இந்தக் கொள்கையை யார் கையில் எடுத்தாலும் நாங்கள் அதனை வரவேற்கிறோம்‌. திருமாவளவன் அதற்காக முன்னிலைப்படுத்துகிறார். அதனை நாங்கள் வரவேற்கிறோம். இந்தியா முழுவதும் யார் காந்தியத்தின் பெயரால் மக்களை ஒன்றிணைக்கும் இலட்சியத்தை கொண்டுள்ளவர்களை நாங்கள் வரவேற்போம். இந்தியா முழுவதும் இந்த லட்சியம் நிறைவேறுவதற்கு நாங்கள் முயற்சி எடுப்போம் என்று கூறினார்.



மேலும், காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த நாங்கள் விரும்புகின்றோம். காங்கிரஸ் கட்சி ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறோம். மக்களுக்காக இதனை மத்திய அரசு செய்ய வேண்டும் என வற்புறுத்துகிறோம். ஒரு ஆட்சியின் தலைவர் யாரையெல்லாம் அமைச்சராக யாரெல்லாம் பொறுப்புகளில் அமர்த்துகிறாரோ அதற்கு உரிமை உண்டு. அதன்படி தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பதவி வழங்கப்பட்டதன் மூலம் இளைஞர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்‌. இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். இளைஞர்களை முன்னிலைப்படுத்த வேண்டும். இந்தியா என்ற நாடு இன்று 40 வயதுள்ளவர்கள் 70 விழுக்காடு இளைஞர்கள் உள்ளதை நாம் மறந்து விடக்கூடாது. அனைத்து தளங்களிலும் வாய்ப்பளிக்க வேண்டும் என்றார். துக்ளக்கில் வேலை காங்கிரசை விமர்சிப்பது தான். ராகுல் காந்தி ஒப்பற்ற தலைவர் அவர் நடவடிக்கைகளை யாரும் கொச்சைப்படுத்த முடியாது. அவர் நினைத்திருந்தால் 2009ல் பிரதமராக இருக்க முடியும். ஆனால் மக்களை நேசித்து மக்களுக்காக நடைபோடும் தலைவரை யாரும் கொச்சைப்படுத்த முடியாது" என்று கூறினார்.