India Inflation Rate : ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.70 சதவீதமாக குறைந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


உலக நாடுகள் கொரோனா பெருந்தொற்று பரவலால் கடும் பொருளாதாரம் சரிவை சந்தித்தது. அதில் இருந்து மீள்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை அந்தந்த நாடுகள் மேற்கொண்டு வந்த சூழலில், கடந்த ஆண்டு திடீரென  உக்ரைன் ரஷியா போரை தொடுத்ததை அடுத்து, வளர்ச்சி அடைந்த நாடுகளை பாதித்தது.  கொரோனா பரவலுக்கு பின் பொருளாதார மீட்சிக்கு பல நாடுகள் போராடி வந்த சூழலில், உக்ரைன் ரஷ்யா பனிப்போரால் உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. 


இந்தியாவின் நிலை?


இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.70 சதவீதமாக குறைந்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தை உயர்த்தும். கடந்த 9 மாதங்களில் ரெப்போ வட்டி விகிதம் தொடர்ச்சியாக 6 முறை உயர்த்தப்பட்டது. கடந்த ஆண்டு மே மாதம் முதல் ரெப்போ வட்டி விகிதத்தை 250 புள்ளிகள் உயர்த்தப்பட்டது. இதனால் வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக உள்ளது.


இதனால், ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 4.70 சதவீதமாக குறைந்துள்ளது என மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேசிய புள்ளியியல் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பணவீக்கத்தை 4-6 சதவீதத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான் அடுத்தடுத்து ரெப்போ விகிதத்தை உயர்த்தி வந்தது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச வரம்பான 6 சதவீதற்கு கீழ் வந்துள்ளது இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. 


பணவீக்கம் குறைவு


மார்ச் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 5.66 சதவீதமாக இருந்தது. இதை தொடர்ந்து ஏப்ரல் மாதமும் 6 சதவீதற்கு கீழ் 4.70 சதவீதமாக பதிவாகி 18 மாத சரிவை பதிவு செய்துள்ளது.  மேலும், ஏப்ரல் மாதத்தில் கிராமப்புறத்தில் சில்லறை பணவீக்கம் 4.68 சதவீதமாகவும், நகர்ப்புறத்தில் சில்லபறை பணவீக்கம் 4.85 சதவீதமாகவும் உள்ளது. இவ்விரண்டுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் போக்குவரத்தும், எரிபொருள் செலவுகள் தான்.


ஏப்ரல் மாதத்தில் கிராமப்புறத்தில் சில்லறை பணவீக்கம் 4.68 சதவீதமாகவும், நகரப்புறத்தில் சில்லறை பணவீக்கம் 4.85 சதவீதமாகவும் உள்ளது. இந்த இரண்டுக்கும் முக்கிய வித்தியாசம் போக்குவரத்தும், எரிபொருள் செலவுதான். சில்லறை பணவீக்கத்தில் உணவு, எரிபொருளும் பெரும் பங்கு வகிக்கிறது. 


காரணம்


இந்தியாவில் எரிபொருள் விலை பல மாதங்களாக எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல் உள்ளது. இதற்கு ஏதுவாக ரஷ்யாவில் இருந்த அதிகப்படியான கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலைவில் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் உள்ளது. அதேபோன்று ஏப்ரல் மாதத்தில்  காய்கறி, பழங்கள், பிற உணவுப்பொருட்களின் விளைச்சால் அதிகமாக இருந்ததால் உணவு பணவீக்கம் பெரிய அளவில் குறைந்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.