இந்தாண்டுக்கான நிதியாண்டில் ( 2022-23 ), இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது( ஜிடிபி ) 6.9 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது.


முந்தைய கணிப்பு:


2021-22 ஆம் ஆண்டு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது 8. 7 சதவீதமாக இருந்தது. அதையடுத்து உலக பொருளாதார மந்த நிலை, பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7. 5 சதவீதமாக இருக்கும் என குறைத்து உலக வங்கி கணித்திருந்தது. இந்த நிலை, மேலும் தொடர்ந்த காரணத்தால் ஜிடிபி-யானது மேலும் குறையும் எனவும், 6.5 சதவீதமாக இருக்கும் எனவும் உலக வங்கி தெரிவித்திருந்தது..






இந்நிலையில், இந்தாண்டுக்கான இரண்டாவது காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சியானது, சற்று உயரும் நிலை காணப்பட்டதால்,  இந்தாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி சற்று உயரும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. அதையடுத்து, அந்த உயர்வானது, 6. 9 சதவீதமாக இருக்கும் எனவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.  இந்த உயர்வானது, தொடர்ந்து மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.


Also Read: Gold Price Hike : 5 மாதங்களில் இல்லாத அளவிற்கு விண்ணை முட்டிய தங்கத்தின் விலை.. 10 கிராமின் விலை இவ்வளவா?


தாக்கம்:


உலகளவில் பணவீக்கம் நிலவி வருவதால் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு நாடுகளிலும் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பல்வேறு நிறுவனங்களும், ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர்.


ஆனால். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவின் பொருளாதாரம் பெரிதாக பாதிப்படையவில்லை என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.


உயரும் பங்கு சந்தை:






மேலும் பணவீக்கமானது, 2022-23 ஆம் ஆண்டு நிதியாண்டில் 7.1சதவீதமாக இருக்கும் எனவும், நிதி பற்றாக்குறை 6.4 சதவீதமாக இருக்கும் எனவும் உலக வங்கி கணித்துள்ளது.


உலக வங்கியானது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை சற்று உயர்த்தி கணித்துள்ளதால், இதன் தாக்கம் பங்கு சந்தையிலும் நிகழக்கூடும். இதனால் வரும் நாட்களில் இந்திய பங்கு சந்தை சற்று ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Also Read: Oyo Layoff: 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறதா OYO...? என்ன காரணம் தெரியுமா..?


Also Read: போர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியல்: இந்தியப் பணக்காரர்களின் மொத்தச் சொத்து அதிகரிப்பு.. முதலிடத்தில் யார்?