உலகப் பொருளாதாரம் மந்தமாக இருக்கலாம் ஆனால் இந்தியாவின் பணக்காரர்கள் இந்த ஆண்டு இன்னும் அதிக பணக்காரர்களாக வளர்ந்துள்ளனர். ஃபோர்ப்ஸ் 2022ன் இந்தியாவின் 100 பணக்காரர்களின் பட்டியல் இறுதியாக வெளியாகி உள்ளது, அதன்படி, இந்தியாவின் 100 பணக்காரர்களின் கூட்டுச் சொத்து அமெரிக்க டாலர் 25 பில்லியன் வரை அதிகரித்து 800 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொட்டுள்ளது. முதல் 10 பணக்கார இந்தியர்களின் மொத்த மதிப்பு அமெரிக்க டாலர் 385 பில்லியன்.


ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி 2008ம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக பெக்கிங் ஆர்டரை மாற்றியமைத்த கெளதம் அதானியின் வரலாற்றுச் சாதனை காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. பணக்காரர்கள் சதவீதம் மற்றும் டாலர் வளர்ச்சி அடிப்படையில் இந்த ஆண்டு அதிக லாபம் ஈட்டியவர் அதானி. அவர் அடுத்த பத்தாண்டுகளில் 100 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யப் போவதாக அறிவித்தார். அதில் 70 சதவிகிதம் க்ரீன் எனர்ஜியில் முதலீடு செய்யப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி 150 பில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாயில் ரூ. 1,211,460.11 கோடி சொத்து மதிப்புடன் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான அதானி உலக அளவில் மூன்றாவது பணக்கார பில்லியனராக இதன் மூலம் தேர்வாகிறார்.




பட்டியலில் அதானிக்கு அடுத்தபடியாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி நிகர மதிப்பு $88 பில்லியன் அல்லது இந்திய ரூபாயில் ரூ.710,723.26 கோடி சொத்து மதிப்புடன் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். கடந்த ஆண்டை விட அவரது சொத்து 5 சதவீதம் குறைந்துள்ளது. முதல் 2 பணக்கார இந்தியர்களுக்கு இடையில், அதானி மற்றும் அம்பானி இப்போது இந்தியாவின் 100 பணக்காரர்களின் மொத்த சொத்துக்களில் 30 சதவீதத்தைக் கொண்டுள்ளனர்.


நாட்டின் சில்லறை வர்த்தக மன்னரான ராதாகிஷன் தமானி டிமார்ட் பல்பொருள் அங்காடிகளின் உரிமையாளர் ஆவார், அவர் 27.6 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 222,908.66 கோடி சொத்துக்களுடன் மூன்றாவது பணக்கார இந்தியராக இடம்பிடித்து உள்ளார். அவரது நிகர மதிப்பு 6 சதவீதம் குறைந்தாலும் அவர் முதல் மூன்று இடங்களுக்குள் நுழைந்துள்ளார்.


 உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் சைரஸ் பூனவாலா தடுப்பூசி விற்பனை காரணமாக நாட்டின் 4 வது பணக்காரராக முன்னேறியுள்ளார். அவரது சொத்து மதிப்பு 21.5 பில்லியன் டாலர் அல்லது இந்திய மதிப்பில் ரூ.173,642.62 கோடி.


அமெரிக்க டாலர் 21.4 பில்லியன் அல்லது இந்திய மதிப்பில் ரூ. 172,834.97 கோடி மதிப்புள்ள ஹெச்சிஎல் டெக்னாலஜிஸின் தலைவரான ஷிவ் நாடார், இந்த ஆண்டு கல்வி தொடர்பான காரணங்களுக்காக அமெரிக்க டாலர் 662 மில்லியனை நன்கொடையாக அளித்தார் மற்றும் முழுமையான நிகர மதிப்பில் மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளார்.


இந்தியாவின் பணக்கார பெண்மணியும், ஓ.பி.ஜிண்டால் குழுமத்தின் தலைவருமான சாவித்ரி ஜிண்டால் ஃபோர்ப்ஸ் டாப் 10 பட்டியலில் உள்ள ஒரே பெண் கோடீஸ்வரர் ஆவார். அவரது நிகர மதிப்பு $16.4 பில்லியன் அல்லது இந்திய மதிப்பில் ரூ.132,452.97 கோடி


சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனர் மகன் திலீப் சங்வியின் மதிப்பு 15.5 பில்லியன் டாலர் அல்லது 125,184.21 கோடி. இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய குழு உறுப்பினர் ஆவார். இவர் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.