விலக்கு அளிக்கப்பட்ட வரம்புக்கு அதிகமாக வருமானம் ஈட்டும் தனி நபர்கள் வருமான வரி செலுத்துவது அவசியமாகிறது. வருமானத்தின் அடிப்படையில் வருமான வரியின் விகிதம் மாறுபடுகிறது. வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் வருமான வரி மாறுபடும்.
அந்த வகையில், தனிநபர் வருமான வரி மூன்று அடுக்காக பிரிக்கப்பட்டுள்ளது.
- 60 வயதுக்கு கீழே இருக்கும் தனிநபர்கள்
- மூத்த குடிமக்கள் ( 60 வயதிலிருந்து 80 வயதானவர்கள்)
- மூத்த குடிமக்கள் (80 வயதுக்கு மேலானவர்கள்)
வயது வரம்பின் அடிப்படையில், மூத்த குடிமக்களுக்கும் மிக மூத்த குடிமக்களுக்கும் சில சலுகைகள் வழங்கப்படுகிறது.
2021-22 மற்றும் 2022-23 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய புதிய மற்றும் பழை வரி முறையை மக்களே தேர்ந்தெடுத்து கொள்ளலாம். புதிய வரி முறையே குறைந்த வரி விகிதங்களை வழங்குகிறது. குறிப்பாக, ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய்க்கு குறைவான வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு குறைந்த வரி விகிதமே விதிக்கப்பட்டுள்ளது.
பழைய வரி முறையில், எந்த வரி விலக்கும் அளிக்கப்படவில்லை. இந்தாண்டு ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமான வரி செலுத்த வேண்டும்.
வருமான வரி செலுத்துவது ஒவ்வொரு குடிமகளின் கடமை ஆகும். எனவே, மறக்காமல் வரி செலுத்துங்கள்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்