தனிநபர் கடன் தரும் ஆப்கள், செல்போனில் உள்ள இமேஜஸ் மற்றும் காண்டாக்ட்ஸ் போன்ற முக்கியமான தரவுகளை அணுகுவதைக் கட்டுப்படுத்துவதாக கூகுள் அறிவித்துள்ளது.


கடன் தரும் ஆப்களுக்கு புதிய கட்டுப்பாடு


கூகுள் நிறுவனம் அதன் தனிநபர் கடன் கொள்கைகளை அப்டேட் செய்துள்ளது. தனிநபர் கடன் கொடுப்பதை எளிதாக்கும் பல ஆப்களுக்கு முக்கியமான தரவுகளான இமேஜஸ் மற்றும் காண்டாக்ட்ஸ் போன்றவற்றை அணுக தடை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. சமீப காலமாக இதுபோன்ற பல ஆப்கள் அவற்றை தவறாக பயன்படுத்தி பலர் வாழ்க்கையை சீரழிக்கும் சம்பவங்கள் நடைபெறுவதால், அதனை தடுக்க இதனை முன்னெடுத்துள்ளது கூகுள்.


கடன்களுக்கு அபரிமிதமான வட்டிகளை உயர்த்துவதும், அந்த வட்டிக்கு வட்டி போடுவது என சில ஆப்கள் மக்களை சிரமத்திற்குள்ளாக்குகின்றன. அவர்களில் சிலர் பணம் செலுத்தமுடியாமல் போகும்போது அவர்களுடைய புகைப்படங்களை எடுத்து 'மார்ஃப்' செய்து அவர்களுடைய காண்டாக்ட்டில் இருக்கும் நபர்களுக்கு அனுப்புகின்றனர். அதுபோக அவர்களுக்கு போன் செய்து தொந்தரவு செய்யும் வழக்கமும் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இது போன்ற லோன் ஆப்களுக்கு இந்த அணுகலை தடுக்க திட்டமிட்டுள்ளது கூகுள்.



பாகிஸ்தான்


ஒவ்வொரு நாடுகளுக்கும் இந்த விதிகள் மாறுவதாகவும், பாகிஸ்தானில் உள்ள பெர்சனல் லோன் ஆப்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று, தனிநபர் கடன்களை எளிதாக்குவதற்கு அவர்கள் தங்கள் திறனை நிரூபிக்க நாடு சார்ந்த உரிம ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. உரிமம் பெற்ற மற்றும் புகழ்பெற்ற கடன் வழங்குபவர்கள் மட்டுமே பாகிஸ்தானில் உள்ள பயனர்களுக்கு தனிப்பட்ட கடன்களை வழங்க முடியும் என்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.


தொடர்புடைய செய்திகள்: கடந்த ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு என புகார்.. ஈபிஎஸ்ஸை விசாரிக்க தமிழ்நாடு அரசு அனுமதி..!


அமெரிக்கா


கடன் வழங்கப்பட்ட நாளிலிருந்து 60 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான நாட்களில் முழுமையாகத் திருப்பிச் செலுத்த வேண்டிய தனிநபர் கடனை ஊக்குவிக்கும் ஆப்ஸ் அனுமதிக்கப்படாது. அமெரிக்காவில், வருடாந்திர வட்டி விகிதம் (APR) 36% க்கும் அதிகமாக உள்ளதால், தனிநபர் கடன் ஆப்களை Google அங்கு அனுமதிக்காது. 



கென்யா


இது தொடர்பான செய்திகளில், கூகுள் தனது புதிய கொள்கையை ஜனவரியில் அமல்படுத்தியதைத் தொடர்ந்து கென்யாவில் உள்ள அதன் Play Store இல் இருந்து நூற்றுக்கணக்கான கடன் தொடர்பான ஆப்களை தடை செய்துள்ளது. கென்யாவின் டிஜிட்டல் கிரெடிட் வழங்குநர்கள் (டிசிபி) விதிமுறைகள் 2022 இல் நடைமுறைக்கு வந்த பிறகு, கிழக்கு ஆப்பிரிக்க நாட்டில் டிஜிட்டல் கடன் வழங்குபவர்கள் உரிமத்திற்கான ஆதாரத்தை வழங்க வேண்டும் என்பது விதி. இந்த விதிகளின்படி, ஆன்லைனில் கடன் வழங்கும் நிறுவனங்கள் கென்யாவின் மத்திய வங்கியிடமிருந்து உரிமங்களைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.