ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் அமேசான் நிறுவனம் கிரேட் இந்தியன் பெஸ்டிவலை நடத்தி வருகிறது. அதில், பல பொருட்கள் சலுகை விலையில் விற்பனை செய்யப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் இன்று தொடங்கி இருக்கிறது.


இதில் ஆயிரக்கணக்கான நிறுவனங்களின் புதிய தயாரிப்புகளும் அறிமுகம் செய்யப்பட உள்ளன. குறிப்பாக சாம்சங், ஜியோமி, சோனி, ஆப்பிள், போட், லெனோவோ, ஆசுஸ், ஃபாசில், லெவிஸ், போஸ்க், பீஜியான், பஜாஜ் என முன்னணி நிறுவனங்களின் புதிய பொருட்கள் இன்று முதல் விற்பனை செய்யப்பட உள்ளன.


சலுகை விலையில் எப்படி பொருட்களை வாங்குவது?


HDFC வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்து பொருட்களை வாங்கினால் 10% உடனடி சலுகையை பெறலாம். அதே போல், HDFC வங்கியின் அனைத்து வகையான EMI பரிவர்த்தைகளுக்கும் ஆஃபர் உள்ளது. குறிப்பாக அமேசான் பே மூலம் தினசரி பரிவர்த்தைகளை மேற்கொண்டால் ரூ.5,000 வரை சேமிக்கலாம் என அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.


அமேசான் பிரைம் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஜியோமி, சாம்சங், விவோ, ஓப்போ, டைசன், வேர்ல்பூல் போன்ற நிறுவனங்களின் ஆஃபர்கள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டன. இதனால் மற்ற வாடிக்கையாளர்களுக்கு முன்பாக அவர்களால் பொருட்களை வாங்க முடியும். அதே போல அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு இலவச டெலிவரி செய்யப்படும். அவர்களுக்கு அமேசான் பே ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கினால், 5% பரிசு புள்ளிகள் தரப்படும்.


இந்த அமேசான் கிரேட் இந்திய பெஸ்டிவலில் ஸ்மார்ட் போன்கள், தொலைக்காட்சி பெட்டிகள், லேட்பாப்புகள், வயர்லெஸ் ஏர் போன்கள், டேப்லெட்டுகள், ஸ்பீக்கர்களுக்கு கூடுதல் சலுகை வழங்கப்பட உள்ளது. இந்த சலுகைகளை தாண்டி கேஷ்பேக், எக்ஸ்சேஞ், மற்றும் வங்கி ஆஃபர்கள் மூலமாகவும் குறைந்த விலையில் பொருட்களை வாங்கலாம்.


>> அமேசான் தள்ளுபடியில் பொருட்களை வாங்க..



ஆஃபர்களை தவறவிடாமல் இருப்பது எப்படி?


அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவலில் பொருட்களை வாங்க பல கோடிக்கணக்கான மக்கள் ஆன்லைனில் காத்துள்ளனர். எனவே ஒருபொருளுக்கான விற்பனை தொடங்கியவுடன் அதை வாங்க போட்டி அதிகமாக இருக்கும். ஒப்பீடு செய்து வாங்குவதற்குள் பல நல்ல ஆஃபர்களை தவறவிடும் நிலை ஏற்படும். சில ஆஃபர்கள் குறைந்த எண்ணிக்கையிலான பொருட்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.


ஆஃபரில் விற்கப்படும் பொருட்கள் தீர்ந்தது தெரியாமல் விளம்பரத்தை பார்த்துவிட்டு வாங்க சென்றால் பழைய விலைக்கு தான் கிடைக்கும். எனவே ஒருபொருளை வாங்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டால், அமேசான் ஆப் அல்லது அமேசான் இணையதளத்தை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டியது அவசியம்.


அமேசான் நிறுவனம் ஏற்கனவே பல பொருட்களின் ஆஃபர் விலையை வெளியிட்டு இருக்கிறது. எனவே அதை வைத்து முன்கூட்டியே ஒரு பட்டியலை தயாரித்தால், விற்பனை தொடங்கியவுடன் தவறவிடாமல் வாங்கலாம். அதே போல அமேசான் செயலியில் நோட்டிபிகேஷன்களை ஆன் செய்து வைத்துக் கொண்டால் ஆஃபர்கள் குறித்த அறிவிப்புகளை அடிக்கடி பெற முடியும்.


அமேசான் விற்கப்படும் பொருட்கள் ஏற்கனவே வேறொரு இ காமர்ஸ் தளத்தில் குறைவான விலையில் விற்கப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே அத்துடன் ஒப்புட்டுக்கொண்டால் இன்னும் குறைந்த விலைக்கு தகுந்த இ காமர்ஸ் தளத்தை தேர்வு செய்து வாங்கலாம்.