நீலகிரிமாவட்டம்கூடலூர்சுற்றுவட்டார பகுதிகளில்மனித - வனவிலங்குமோதல்கள்நாளுக்குநாள்அதிகரித்து வருகின்றன. அதிலும்குறிப்பாககுடியிருப்புகளைஒட்டிய பகுதிகளில்யானைமற்றும்புலிகளின்நடமாட்டங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக டி 23 எனப் பெயரிடப்பட்ட ஆண் புலி ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்த நிலையில், மனிதர்களையும் தாக்கி வருகிறது. உடலில்ஏற்பட்டுள்ள காயத்துடன்காட்டைவிட்டுவெளியேறிய அந்த புலிகூடலூர்சுற்றுவட்டாரப்பகுதிகளில்உள்ளதேயிலைத்தோட்டங்களில்நடமாடிவந்தது. இந்நிலையில் கடந்த வாரம் தேவன்எஸ்டேட்பகுதியைச்சேர்ந்தசந்திரன்என்றநபர்புலி தாக்கியதில் உயிரிழந்தார்.
புலி நடமாட்டம் காரணமாக கூடலூர் சுற்றுவட்டார பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். புலியை பிடிக்கக் கோரி உள்ளூர்மக்கள்தொடர்போராட்டங்களைநடத்தினர். இதையடுத்துபுலியைபிடிக்கும்பணியில்வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வார காலமாக தேவன் எஸ்டேட் பகுதியில் சுற்றித் திரிந்த டி 23 புலி, சிங்காரா பகுதிக்கு இடம் பெயர்ந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புமுதுமலைபுலிகள்காப்பகத்துக்குஉட்பட்டசிங்காராவனப் பகுதியில்குறும்பர்பாடிஎன்ற இடத்தில்ஆடுமேய்த்துக் கொண்டிருந்தமங்களபசவன்என்றவரைபுலிகடித்துகொன்றது. இதில்அவரதுதலைபகுதியைதின்றபுலிவனத் துறையிடம்இருந்துதப்பியது.
மசினகுடிபகுதியில்ஆட்கொல்லிபுலியைசுட்டுக் கொல்லநடவடிக்கைஎடுக்கவேண்டும்எனபொதுமக்கள் சாலையில்மறியலில்பொதுமக்கள்ஈடுபட்டனர். டி 23 புலி இதுவரை 4 மனிதர்களையும், 30 க்கும் மேற்பட்ட கால்நடைகளையும் தாக்கி கொன்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனிடையே ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல தமிழ்நாடு முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவிட்டார். புலியை சுட்டுக் கொல்ல எதிர்ப்பு தெரிவித்து, சமூக வலைதளங்களில் பலர் கருத்திட்டு வருகின்றனர். மேலும் சுட்டுக் கொல்ல எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் உள்ளூர் மக்கள் புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு,கேரளா,கர்நாடகாமாநிலங்களைசேர்ந்தசுமார் 75-க்கும்மேற்பட்டவனத்துறையினர் மற்றும் அதி விரைவுப்படையினர்புலியைபிடிக்கும்பணியில்ஈடுபட்டுள்ளனர். புலி நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து வனத்துறையினர் பிடியில் அகப்படமால் புலி சுற்றி வருகிறது. ஒன்பதாவது நாளாக வனத்துறையினர் புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மயக்க ஊசி மற்றும் துப்பாக்கியுடன் வனத்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். புலி நடமாட்டம் காரணமாக சிங்காரா, மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழ்நாடு தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் இன்று மசினகுடியில் தேடுதல் பணி நடைபெறும் இடத்திற்கு வந்து அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். தொடர்ந்து புலியை கண்டு பிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டு வருவதால், இன்று 10 குழுக்களாக தேடும் பணி அதிகரித்து உள்ளதாகவும், 3 ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கபட்டு வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் புலியை சுட்டு கொல்லாமல் உயிருடன் மயக்க ஊசி செலுத்திப் பிடிப்பது தான் தாங்களது நோக்கம் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே முதுமலையில் உள்ள அதவை என்ற மோப்பநாய் தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், மேலும் 2 மோப்ப நாய்கள் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. கும்கி யானைகள் வரவழைத்து அவற்றின் மீது அமர்ந்தவாறு அடர்ந்த புதருக்குள் சென்று தேட கும்கி யானைகள் வரவழைக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சீனிவாசன் என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் 3 ட்ரோன்களை கொண்டு கண்காணிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
