ஜூன் மாதத்திற்கான ஜி.எஸ்.டி. (Goods & Services Tax (GST) வசூல் ரூ. 1.74 லட்சம் கோடி ஆக உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 


கடந்த 2017ம் ஆண்டு ஜூலையில் இருந்து சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டது. எட்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள ஜி.எஸ்.டி. வசூல் நடைமுறையின் மாதாந்திர வசூல் குறித்து ஒவ்வொரு மாதமும் அறிவிக்கப்ப்படும். 


 உள்நாட்டில் விற்பனை அதிகரித்த காரணத்தால், மே மாத ஜி.எஸ்.டி., வசூல், 10 சதவீதம் அதிகரித்து, ரூ. 1.73 லட்சம் கோடியாக இருந்தது. இந்நிலையில் ஜூன் மாதத்தில் ஜி.எஸ்.டி., வசூல் 7.7 சதவீதத்துடன் ரூ. 1.74 லட்சம் கோடியாக உள்ளது. இதில் சி.ஜி.எஸ்.டி., ரூ. 39,586 கோடி, எஸ்.ஜி.எஸ்.டி. ரூ. 33,548 கோடி உள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு ஜூன் மாதம் 8 சதவீதம் இ.எஸ்.டி. வசூல் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரமல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.2.20 லட்சம் கோடி பதிவு செய்து சாதனை படைத்தது. 


ஜி.எஸ்.டி. வசூலில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்வு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அடுத்த சீரமைப்பு செய்யப்படுவது எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வோர்க்கிங் கேப்பிள் ப்ளாக்கேஜஸ், ஸ்டீம்லைன் டேக்ஸ் ரேட்ஸ், ஐ.டி.சி. விதிமுறைகளில் தளர்வு, தற்போது நிலவும்  துறை ரீதியான தீர்வுகள் வழங்குவது உள்ளிட்டவைகள் சீரமைப்புகள் செய்யப்பட்டலாம் என்று வரித்துறை நிபுணர் தெரிவித்துள்ளார். 






ஒவ்வொரு மாதமும் முதல் நாள் ஜி.எஸ்.டி. வரி வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிடும். ஆனால், இனி அந்த விவரங்கள் வெளியிடப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 74 மாதங்களாக வெளியிடப்பட்டு வந்த மாதாந்திர அறிக்கை வெளியிடுவதை நிறுத்தியத்தற்கு எந்த காரணம் குறித்து எந்தவித விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை. 


இந்த நிதியாண்டில் முதக்ல் மூன்று மாதங்களில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.5.57 லட்சம் கோடியாக உள்ளது. 


சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்டு ஏழாண்டுகளை குறிப்பிட்டு நிதியமைச்சகம் சமூல வலைதளமாக எக்ஸில் வெளியிட்டுள்ள போஸ்டில் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு வரியை குறைத்ததன் மூலம் மக்கள் பயன்பெற்றுள்ளதாக  “happiness and relief to every home” என குறிப்பிட்டுள்ளது.