பானி பூரியில் புற்றுநோய் உருவாக்கும் ரசாயனம் சேர்க்கப்படுவதாகவும் அதை சாப்பிடுவது உடல்நலனை கடுமையாக பாதிக்கும் என்றும் இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (FSSAI)தெரிவித்துள்ளது. 


பானி பூரி:


‘பானி பூனி’- யாருக்குத்தான் பிடிக்காது இந்த ஸ்நாக். மழை நேரத்தில் கொரிக்க, ரசித்து சாப்பிடலாம். எந்த நேரத்திற்கும் பெஸ்ட் ஸ்நாக்காக பெரும்பாலானவர்களின் தேர்வாக இருப்பது பானி பூரி. மொறுமொறு குட்டி பூரியில், வேக வைத்த தானியங்கள், உருளைக்கிழங்கு கலவையுடன் மசாலா தண்ணீரில் டிப் செய்து வாயில்போட்டு சாப்பிட்டால்... அதன் சுவையே தனி. 


ஒருகாலத்தில் வட இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்தது. பிறகு இந்தியா முழுவதும் அனைவராலும் பெரிதும்  விரும்பப்பட்டது.


கர்நாடக மாநிலத்தில் உள்ள தெருவோர கடைகளில் FSSAI  அதிகாரிகள் உணவு தரம் குறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது பானி பூரியில் சேர்க்கப்படும் பொருட்கள் மனிதர்கள் உண்ண ஏற்றதல்ல என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போது சேகரிக்கப்பட்ட 260 மாதிரிகளில் 41-ல் சேர்க்கப்படும் செயற்கை நிறமி உடல்நலனுக்கு தீவிர கேடு விளைவிக்கக்கூடியவை என்று தெரியவந்துள்ளது. இதில் சேர்க்கப்படும் செயற்கையான நிறமிகளால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ஏன் ஆபத்து?


பானி பூரி தயாரிகக் பயன்படுத்தப்படும் நிறப்பொடிகளில் அதிகமாக உள்ள வேதியம் நிறமிகளால் வயிறு உபாதைகள் தொடங்கி இதய பாதிப்புகள், புற்றுநோய் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் உண்டாகும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் ஏற்கனவே சிக்கன் கெபாஸ், கோபி மஞ்சூரியன், பஞ்சு மிட்டாய் ஆகிய உணவுகளில் ‘ ரோடைமைன் -பி’ என்ற செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்படுள்ளது கண்டறியப்பட்டு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது.இதே ரசாய பொருள் பானி பூரியில் பயன்படுத்தப்பட்டுள்ளது சோதனை கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளனர். 


பானி பூரி தரமற்றது என்று வெளியாகியுள்ள தகவல் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு, உடல்நலனை கவனத்தில் கொண்டு பானி பூரி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.  


உணவு தரம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்விற்காக சேகரிப்பட்டவற்றில் 22 சதவீத பானி பூரி தரமற்றது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதில், 18 மனிதர் உண்ணுவதற்கு ஏற்றதல்ல என்று தெரியவந்துள்ளது. 


உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் அதிகாரி ஒருவர் கூறுகையில்,” கர்நாடக மாநிலத்தில் தெருவோர கடைகளில் விற்பனை செய்யப்படும் பானி பூரியின் தரம் குறித்து புகார்வந்தது. அதனால், நாங்கள் மாதிரிகளை சேகரித்து அதை ஆய்வுக்குட்படுத்தினோம். அதில் பல சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல, ஏராளமான உடல்நல கேடு ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும்..” என்று தெரிவித்தார். 


Rhodamine-B உணவுகளில் பயன்படுத்த தடை:


‘ ரோடைமைன் -பி’ என்ற வேதிப்பொருள் நிறத்திற்காக சில உணவுகளில் சேர்க்கப்படுவதாக ஏற்கனவே கர்நாடக அரசு அதற்கு தடை விதித்திருந்தது. விற்பனையாளர்கள் குறிப்பிட்ட இந்த கெமிக்கல் பொருளை உணவு தயாரிப்புகளில் பயன்படுத்த கூடாது என்று டஉத்தரவிட்டிருந்தது.  “ மக்களுக்கு தரம் வாய்ந்த உணவு கிடைப்பதே எங்களின் ஒரே நோக்கம்.” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 


‘ரோடைமைன் -பி' உடலிலுள்ள செல்கள் இறப்பதற்கு காரணமாக அமைந்து விட்டும். திசுக்கள் பாதிப்படைவதற்கும் காரணமாகிவிடும். இதனால் cerebellum, brainstem, சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 


அதோடி, பொதுமக்கள் கவனத்துடன் உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும் என்றும் உணவு தயாரிக்கும் நிறுவனங்கள் ‘ரோடைமைன் -பி' உள்ளிட்ட கெமிக்கல் பொருட்கள் உணவில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.