2023 ஏப்ரல் மாதத்தில்  மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,87,035 கோடி வசூலாகியுள்ளது. முதன்முறையாக ஒரு மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் 1.75 கோடியை கடந்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax; GST) ஒரு மறைமுக வரி, இது இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரி.  கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாடு முழுவதும் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தியது.  இந்நிலையில் ஏப்ரல் 2023க்கான ஜிஎஸ்டி வசூல் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு தெரிவித்துள்ளதாவது: 2023 ஏப்ரல் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,87,035 கோடி, இதில் சிஜிஎஸ்டி ரூ.38,440 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ 47,412 கோடி, ஐஜிஎஸ்டி ரூ 89,158 கோடி (பொருட்களின் இறக்குமதியில் வசூலான ரூ 34,972 கோடி உட்பட)  செஸ் வருவாய் ரூ.12,025 கோடி (பொருட்களின் இறக்குமதியில் வசூலான ரூ 901 கோடி உட்பட). 

ஐஜிஎஸ்டியிலிருந்து சிஜிஎஸ்டிக்கு ரூ.45,864  கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ.37,959 கோடியும் வழக்கமான தீர்வாக அரசு வழங்கியுள்ளது.  தீர்வுக்குப் பிறகு ஏப்ரல் 2023ல் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்த வருவாய் சிஜிஎஸ்டிக்கு ரூ 84,304 கோடியும், எஸ்ஜிஎஸ்டிக்கு ரூ 85,371 கோடியும் ஆகும்.

2023 ஏப்ரல் மாதத்திற்கான வருவாய் கடந்த ஆண்டு இதே மாதத்தில் ஜிஎஸ்டி வருவாயை விட 12% அதிகமாகும். முதன்முறையாக ஜிஎஸ்டி வசூல் 1.75 கோடியை கடந்துள்ளது. ஏப்ரல் 2023ல் ஜெனரேட் செய்யப்பட்ட இவே பில்களின் எண்ணிக்கை 9.0 கோடியாகும். இது கடந்த பிப்ரவரி 2023ல் தாக்கல் செய்யப்பட்ட இவே பில்களின் எண்ணிக்கையான 8.1 கோடியைவிட 11 சதவீதம் அதிகமாகும்.

ஏப்ரல் 2023ல் கடந்த 20 ஆம் தேதி மட்டும் ஒரே நாளில் ரூ.68,228 ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது. 9.8 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் இது வசூலாகியுள்ளது. இதேபோல் கடந்த ஆண்டு நடந்த ஒரே நாளில் வசூலான ஜிஎஸ்டி ரூ.57,846 கோடியாகும். இது 9.6 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் வசூலானது.

ஜிஎஸ்டி வரி வசூல் விவரம்: 2022 ஏப்ரல் மற்றும் 2023 ஏப்ரல் ஒப்பீடு

 

ஏப்ரல் 2023 மாநில வாரியாக ஜிஎஸ்டி வசூல் எவ்வளவு?
 

 

State/UT

Apr-22

Apr-23

Growth (%)

Jammu and Kashmir

560

803

44

Himachal Pradesh

817

957

17

Punjab

1,994

2,316

16

Chandigarh

249

255

2

Uttarakhand

1,887

2,148

14

Haryana

8,197

10,035

22

Delhi

5,871

6,320

8

Rajasthan

4,547

4,785

5

Uttar Pradesh

8,534

10,320

21

Bihar

1,471

1,625

11

Sikkim

264

426

61

Arunachal Pradesh

196

238

21

Nagaland

68

88

29

Manipur

69

91

32

Mizoram

46

71

53

Tripura

107

133

25

Meghalaya

227

239

6

Assam

1,313

1,513

15

West Bengal

5,644

6,447

14

Jharkhand

3,100

3,701

19

Odisha

4,910

5,036

3

Chhattisgarh

2,977

3,508

18

Madhya Pradesh

3,339

4,267

28

Gujarat

11,264

11,721

4

Dadra and Nagar Haveli and Daman and Diu

381

399

5

Maharashtra

27,495

33,196

21

Karnataka

11,820

14,593

23

Goa

470

620

32

Lakshadweep

3

3

-7

Kerala

2,689

3,010

12

Tamil Nadu

9,724

11,559

19

Puducherry

206

218

6

Andaman and Nicobar Islands

87

92

5

Telangana

4,955

5,622

13

Andhra Pradesh

4,067

4,329

6

Ladakh

47

68

43

Other Territory

216

220

2

Center Jurisdiction

167

187

12

Grand Total

1,29,978

1,51,162

16

 

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதத்தில்ரூ.9,245 கோடி ஜிஎஸ்டி வசூலாகி இருந்தது.புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம்  ரூ.163 கோடி வசூலாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஏப்ரல் 2023ல் தமிழகம், புதுச்சேரியில் ஜிஎஸ்டி வசூல் முறையே ரூ.11,559 மற்றும் ரூ. 218 கோடியாக உயர்ந்துள்ளது.