கூகுள் ட்ரான்ஸ்பேரணசி ரிப்போர்ட் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், இந்திய அளவில் தமிழகத்தில் தான் அதிக அளவு அரசியல் விளம்பரங்களுக்கு செலவிடப்பட்டுள்ளது. சென்ற 2019ம் ஆண்டு 19ம் தேதி முதல் இன்று வரை செலவிடப்பட பணத்தின் மதிப்பை வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். அதாவது கூகுள், யூடியுப் மற்றும் அதை சார்ந்து உள்ள நிறுவனங்களுக்கு மட்டும் அரசியல் காட்சிகள் எவ்வளவு செய்துள்ளது என்பதற்கான பட்டியல் தான் இது. 


இந்த பட்டியலில் முதலிடத்தில் பாரதிய ஜனதா கட்சி உள்ளது, இரண்டாம் இடத்தில் திமுகவும் மூன்றாம் இடத்தில் அதிமுகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பட்டியலில் சில தனியார் நிறுவனங்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது. அந்த நிறுவனங்கள் எந்த கட்சிக்காக வேலைசெய்து வருகின்றார்கள் என்று தெரிந்தால், இந்த பட்டியலில் சில மாற்றங்கள் வர வாய்ப்புண்டு. 


வெளியான பட்டியலின் அடிப்படையில் : 


பாஜக -   17 கோடியே 33 ஆயிரத்து 500 ரூபாய் 
திமுக - 15 கோடியே 61 லட்சத்து 11 ஆயிரத்து 750 ரூபாய்
அதிமுக - 45 கோடியே 2 லட்சத்து 58 ஆயிரத்து 250 ரூபாய் 
நாம் தமிழர் - 11 லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் 
மக்கள் நீதி மய்யம் - 1 லட்சத்து 34 ஆயிரத்து 750 ரூபாய்