என்ன தான் தனது மாமனார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், அவர் பெயரை பயன்படுத்தாமல் சினிமாத்துறையில் தனக்கென தனித்தடத்தை பதித்துக் கொண்டிருக்கிறார்  நடிகர் தனுஷ். ஆனால் சமீபமாக ரஜினியின் சில நல்ல பண்புகளை கடைபிடிக்கத் துவங்கியுள்ளார் தனுஷ். 




 


தனது ரசிகர்களின் ‛பல்ஸ்’ பார்ப்பதில் எப்போதும் ரஜினி வித்தியாசமானவர். தனது படம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு மாறுவேடத்தில் சென்று ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்து, அவர்களின் விருப்பத்தை அறிந்து கொள்வது ரஜினியின் பார்முலா. அதே பார்முலாவை தற்போது நடிகர் தனுஷ் பின்பற்றத் துவங்கியிருக்கிறார்.




தனது படங்களை மாறுவேடத்தில் சென்று பார்க்கும் தனுஷ், ரசிகர்களுடன் அமர்ந்து அவர்களின் விருப்பங்களை அறிந்து கொண்டு, பின்னர் அவற்றை தனது இயக்குனர்களிடம் பகிர்ந்து வருகிறாராம். தனுஷின் இந்த ஆர்வம்,  இயக்குனர்களுக்கும் பிடித்து போக, ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப காட்சிகளை அவரது படங்களில் இடம்பறெ செய்கிறார்களாம். தனுஷின் சமீபத்திய ஹிட் படங்களுக்கும் இது தான் காரணமாம்,