சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 970 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 39 ஆயிரத்து 760 க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்று ஒரு கிராம் தங்கம் ரூபாய் 85 அதிகரித்து ரூபாய் 5 ஆயிரத்து 55க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 680 அதிகரித்து ரூபாய் 40 ஆயிரத்து 440க்கு விற்கப்படுகிறது. 


சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 75.20 க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 75200க்கு விற்கப்படுகிறது.  


ஏன் உயர்வு..?


பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும். அந்த வகையில் உக்ரைன் போர் காரணமாக தொடர்ந்து பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. அதனால்  தங்கத்தின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது


பங்குச்சந்தை நிலவரம்:


பங்குச் சந்தை இன்று சரிவுடன் தொடங்கியது. ரஷ்யா –உக்ரை போரின் விளைவு தொடர்ந்து பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்து வருகிறது.


இந்திய பங்குச் சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று சரிவுடன் தொடங்கியது.  இன்றைய நிலவரப்படி,  மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,439 புள்ளிகள் சரிந்து 52,893 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 405 புள்ளிகள் அல்லது 15,839 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது.


ஐசிஐசிஐ வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், மாருதி சுசூகி, எல்&டி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் வீழ்ச்சியுடன் வர்த்தகமாகின்றன. சென்செக்ஸ் பங்குகளில், பஜாஜ் ஃபைனான்ஸ் 5.71 சதவீதம் சரிந்து ரூ.6,211 ஆக இருந்தது. மாருதி சுசுகி 5.74 சதவீதம் சரிந்தது. சுசுகி 5.74 சதவீதம் சரிந்து ரூ.6,828.70 ஆக உள்ளது. ஐசிஐசிஐ வங்கி, மஹிந்திரா & மஹிந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் லார்சன் அண்ட் டூப்ரோ 4-5 சதவீதம் சரிந்தன. சென்செக்ஸ் பெரும்பாலான 2,861 பங்குகளில் 2,186 பங்குகள் சிவப்பு நிறத்தில் வர்த்தகம் செய்யப்பட்டன. மொத்தத்தில் 207 பங்குகள் வீழ்ச்சியுடன் வர்த்தகமாகி வருகிறது.


 


அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அரசுகள்  ரஷ்ய அரசின் மீதான இறக்குமதி தடை காரணமாக இன்று  எண்ணெய் விலை அதிகரித்தது.