இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் தொடர்ந்து உச்சத்திற்கு செல்லும் தங்கம் விலை தற்போது புதிய உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபீாய் 80 உயர்ந்து ஒரு கிராம் ரூபாய் 7 ஆயிரத்து 240க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 640 உயர்ந்து ரூபாய் 57 ஆயிரத்து 920க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை கடந்த 3 நாட்களில் மட்டும் ரூபாய் 1160 அதிகரித்து உள்ளது மக்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து உயர்வு:
தங்கம் என்பது சிலருக்கு ஆடம்பர பொருளாக இருந்தாலும் சிலருக்கு நெருக்கடியான காலத்தில் உதவும் அத்தியாவசிய பொருளாக இருக்கிறது என்பதே உண்மை ஆகும். ஆனால், சமீபமாக சில ஆண்டுகளில் தங்கம் விலை என்பது தொடர்ந்து உச்சத்திற்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறது.
குறிப்பாக, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் வட்டி விகிதம் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது தங்களது கவனத்தை திசை திருப்பி வருகின்றனர். இதன் காரணமாக உலக நாடுகளில் தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. உலகிலேயே அதிகளவு தங்க நகைகள் வாங்கும் மற்றும் பயன்படுத்தும் நாடு இந்தியா ஆகும். இதன் காரணமாக மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவில் தங்க நகைகள் விலை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
மக்கள் வேதனை:
சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூபாய் 7 ஆயிரத்து 160க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 57 ஆயிரத்து 280க்கு விற்கப்படுகிறது. இன்று ஒரு கிராம் 80 ரூபாய் உயர்ந்ததால் ரூபாய் 7 ஆயிரத்து 240க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 57 ஆயிரத்து 920க்கு விற்ப்படுகிறது. ஜி.எஸ்.டி. வரி, செய்கூலி, சேதாரம் ஆகியவற்றை சேர்த்து ரூபாய் 60 ஆயிரம் அளவக்கு தங்கம் கடைகளில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் விற்பனையாகி வருவதால் பொதுமக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.