Gold Rate Today : இல்லத்தரசிகளுக்கு பேரிடி.. வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்ட தங்க விலை!
Gold Rate Today : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு இன்று(31.01.2025) சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்துள்ளது.
சென்னையில் கடந்த இரு வாரங்களாகவே ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. . தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், இன்று வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
புதிய உச்சம்:
இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் தான் உள்ளது. சிறிதளவு குறையும் தங்கத்தின் விலை, உயரும்போது அதிக அளவில் உயர்ந்து வருகிறது. ஜனவரி ஓன்றாம் தேதி தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு 7,150 ரூபாயாக இருந்தது. தினமும் படிப்படியாக உயர்ந்த தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 960 உயர்ந்து ஒரு சவரன் 61,840 ரூபாயாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 7,730-க்கு ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
Just In




இதையும் படிங்க: Economic Survey 2025 LIVE: அடிக்குது ஜாக்பாட்.. ரகசியம் சொன்ன பிரதமர் மோடி - வரி குறைஞ்சு, வருமானம் எகிறுமா?
ஜனவரி 1 ஆம் தேதி 7150 இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை இருந்தது. தற்போது ஒரு கிராமின் விலை 7,730 உயர்ந்துள்ளது. கடந்த பத்து நாட்களில் மட்டும் ஒரு கிராம் தங்கத்தின் விலை 280 ரூபாய் உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: Budget 2025:பட்ஜெட் தயாரிப்பு குழுவில் இருப்பவர்கள் யார்? நிர்மலா சீதாராமன் டீம் இதுதான்!
ரூ.62000-ஐ நெருங்கும் தங்கத்தின் விலை
இன்றைய(31.01.25) நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமிற்கு 120 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 7,730 ரூபாயாகவும், சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 61,840 ரூபாயாக உள்ளது. தங்கம் விலை தற்போது 62,000 ரூபாயை நெருங்கி வருவதால் பொதுமக்கள் மற்றும் திருமணம் வைத்திருக்கும் அனைவரும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.