நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட இருகிறது. பட்ஜெட் தயாரிப்பு குழுவினர் யார் என்பது பற்றிய விவரங்களை காணலாம். 


மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2025:


நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு ஜனவரி 31-ம் முதல் பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இரு அவைகளிலும் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்வது ஆகிய நிகழ்வுகள். பிப்ரவரி, 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 


பட்ஜெட் கூட்டத்தொடர் 31-ம் தேதி வரை முதல் பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெறும். அடுத்து மார்ச் 10ம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும். நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏப்ரல் 4-ம் தேதி முடிவடையும். 


நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை தாக்கல் செய்ய இருக்கிறார். அவரோடு பட்ஜெட் தயாரிக்கும் குழு இருக்கிறது. பொருளாதாரம், நிதி ஆகிய துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள் பட்ஜெட் தயாரிப்பு குழுவில் இருப்பார்கள். அமைச்சர் நிர்மலா சீதாராமன் குழுவில் இருக்கும் நிபுணர்கள் யார் என்பது பற்றி காணலாம். 


பட்ஜெட் தயாரிப்பு குழு விவரம்:


ஆனந்த நாகேஸ்வரன்


இவர் தலைமை பொருளாதார ஆலோசகர். IIM, அகமதாபாத்தில் கல்வி பயின்றவர். மேக்ரோ பொருளாதார ப்ரேம்ஒர்க் உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார். இப்போது இந்திய அரசின் பொருளாதார ஆலோசகராக இருக்கிறார். பொருளாதார ரீதியிலாக ஆய்வுகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குபவராக இருக்கிறார். 


மனோஜ் கோவில் செலவு தொடர்பான செயலாளர்


ஐ.ஐ.டி. கான்பூரில் படித்தவர். பட்ஜெட் தயாரிப்பில் இவர் புதிய திட்டங்கள், திட்டங்கள் தொடர்பான வழிமுறைகள், மாநிலங்களுக்கு தேவையான திட்டங்கள் என்னென்ன உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அதை அங்கீகரிக்கும் பணியை செய்பவர். 1991-ம் ஆண்டில் மத்திய பிரதேசத மாவட்டத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணியாற்றினார். 2024- ஆகஸ்ட் அரசின்  'Expenditure Secretary' பொறுப்பேற்றார். கார்ப்ரேட் விவகாரங்களில் இவருக்கு இருக்கும் அனுபவம் பட்ஜெட் தயாரிப்பதில் பெரிதும் உதவியாக இருக்கும். 


அஜய் செத், பொருளாதாரா விவகார துறை செயலாளர்


பட்ஜெட் தயாரிப்பு குழுவில் உள்ள சீனியர் நபர், அஜய் செத். 2021, ஏப்ரல் முதல் இவர் ‘Department of Economic Affairs (DEA)' துறையில் பணியாற்றி வருகிறார். இவர் பட்ஜெட் உரையை இறுதிப்படுத்துவது, பட்ஜெட் தயாரிப்பு பணிகளை மேற்கொள்ளும் குழுவினருக்கு ஆலோசனை வழங்குவது ஆகிய பொறுப்புகள் இவரிடம் உள்ளது. 


துஹின் கந்தா பாண்டே, நிதி மற்றும் வருவாய் செயலாளர்


துஹின் கந்தா பாண்டே - இவர் ஒடிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரி.  நாடாளுமன்ற பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதால் 2025, ஜனவரியில் வருவாய் செயலாளராக பொறுப்பேற்று கொண்டார். இவர் மாநிலத்தின் வருவாயை எப்படி உயர்ந்த்துவது வரி நடைமுறையை எப்படி எளிதாக்குவது ஆகிய பணிகளை மேற்கொள்வார். 


அருணிஷ் சாவ்லா


அருணிஷ் சாவ்லா - பீகாரைச் சேர்ந்தவர். ஐ.ஏ.எஸ். அதிகாரி. அசட் மானிடைசேசன் பிரிவில் இவரது பங்களிப்பு இருக்கும். 


 நாகர்ஜூனா


 நாகர்ஜூனா - இவர் நிதித்துறை செயலாளர். திரிபுராவைச் சேர்ந்தவர். 1993-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருந்தவர். க்ரெடிட் ஃப்லோ, ஃபிண்டெக் ரெகுலேசன், இன்சுரன்ஸ் கவரேஜ் ஆகிய துறைகளை கவனிப்பார். இவர் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி இருக்கிறார். இவரின் அனுபவம் பட்ஜெட் தயாரிப்பில் பெரும் பங்கு வகிக்கும்.