இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்:


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.198 அதிகரித்து ரூ.37,760 ஆக விற்பனையாகிறது.  22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ. 24 உயர்ந்து ரூ.4 ,720  ஆக விற்பனையாகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 40,960 ரூபாயாகவும், ஒரு கிராம் 5,122 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


வெள்ளி விலை நிலவரம்:


சென்னையில் வெள்ளி கிராமுக்கு 61.10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளியின் விலை 61,100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 


மேலும் படிக்க : 100-வது ஒருநாள் போட்டியில் 100 அடித்த ரோலக்ஸுகள் ... இந்தியாவிற்கு எதிராக மட்டும் இத்தனை வீரர்களா..?


சென்னையில், நேற்றைய நிலவரப்படி ,22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  ரூ.37, 568 ஆகவும் , 22 கேரட் தங்கம் கிராமுக்கு  ரூ.4,696ஆகவும் விற்பனையானது. 




தங்க ஆபரணங்கள்:


இந்தியக் குடும்பங்களில் தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமணங்களின்போது மணமகள் அணியும் தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு சென்னை புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது. அதனால் தான் மக்கள் தங்கத்தை ஆபரணமாக வாங்க விரும்புகிறார்கள். தங்கம் என்றைக்குமே ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது.


இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்களும் கிடையாது. தரம் மட்டுமே முக்கியம். சுத்தமான தங்கம் என்று உங்களை நம்பவைக்கிற மாதிரி பேசி குறைந்த தங்கத்தை தலையில் கட்டிவிடுவார்கள். 24 காரட் தங்கம் என்று சொல்லி 18 காரட் தங்கத்தை தந்து ஏமாற்றி விடுவார்கள். அதனை விற்கும்போதும் அல்லது அடகு வைக்கும் போதுதான் இந்த உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியவரும்.


மேலும் படிக்க : பதவிப் பிரமாணம் செய்துவைத்த தலைமை நீதிபதி.. இந்தியாவின் 15-வது குடியரசுத்தலைவராக பதவியேற்றார் திரெளபதி முர்மு..


அதற்கு நம்பிக்கையான இடத்தில் தங்கத்தை வாங்குவது அவசியம். எப்போது வேண்டும் என்றாலும் வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ தங்கத்தை அடகு வைத்து பணம் பெறலாம். ஆக.. தங்கத்தில் செய்யப்படும் முதலீடும் ஒரு வகையில் இன்று லாபம் தரும் வணிகமாகவே கருதப்படுகிறது. தங்கம் என்றென்றும் சேமிப்புக்கானதாய் பார்க்கப்படுவதால், அதன் விலை தொடர்ச்சியாக மக்களால் கண்காணிக்கப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண