இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்:
இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.38,548 ஆகவும், கிராம் ஒன்றுக்கு ரூ.14 குறைந்து ரூ.4,823 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை ரூ.70 காசு குறைந்து ரூ.65.80 ஆக விற்பனையாகிறது.
24 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 5,276 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ. 40,464 ஆக வர்த்தகமாகிறது.
நேற்றைய நிலவரப்படி, 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38,648 ஆகவும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,831 ஆகவும் விற்பனையாகிறது. 24 காரட் தங்கம் ஒரு சவரன் 41,840 ஆகவும், ஒரு கிராம் ரூ.5,230 ஆக விற்பனையாகிறது. இன்றைய நிலவரப்படி, ஆபண தங்கத்தின் விலை ரூ.112 அதிகரித்து விற்பட்டது.
அமெரிக்க டாலரின் மதிப்பானது நிலையானதாக மாறியுள்ள நிலையில், தங்கம் விலையானது உயர்ந்து காணப்படுகின்றது. தங்கம் விலையினை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக டாலர் மதிப்பு தற்போது வலுவான காராணியாக மாறியுள்ள நிலையில், தங்கம் விலையானது உச்சத்தில் இருந்து சற்று குறைந்து காணப்படுகிறது. சரிவில் உள்ள டாலரின் மதிப்பானது, தங்கத்தினை குறைவான விலைக்கு வாங்க வழிவகுக்கலாம். ஆக இதுவும் தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம்.
இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்