மொபைல்போன்கள் நமது வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மாறிவிட்டன. நமது காலை பொழுதை தொடங்குவது முதல் அலுவக வேலை முடித்து வீடு திரும்பும் வரை அனைத்திலும் மொபைல் ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்டது எனலாம்.மொபைல்போன் என்பதை விட ஸ்மார்ட்போன் என்றால்தான் சரியாக இருக்கும் என கருதுகிறேன். விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களை வாங்கினாலும் கூட அவசர காலத்தில் நாம் செய்யும் சில சின்ன சின்ன மிஸ்டேக்ஸ் காரணமாக அதன் ஆயுட்காலத்தை நாமே நம்மை அறியாமல் குறைத்து விடுகிறோம். அப்படி நாம் செய்யக்கூடிய செய்யக்கூடாத விஷயங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.


தவறான சார்ஜரைப் பயன்படுத்துதல் :


சிலர் விலை உயர்ந்த மொபைல்களை வாங்கியிருப்பார்கள் ஆனால் சில அவசர காலங்களில் வேறு ஒருவரின் சார்ஜரை பயன்படுத்துவார்கள் அது தவறான விஷயம் அது உங்கள் மொபைலின் பேட்டரி ஆயுள்காலத்தை குறைக்கலாம். அதேபோல மொபைலுடன் வரும் சார்ஜர் தொலைந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ சந்தையில் கிடைக்கும் மலிவு விலை சார்ஜரை பயன்படுத்துவார்கள். அது ஷார்ட் சர்க்யூட் ஆகலாம். அப்படியாக ஆனால் உங்கள் மொபைல் தீப்பற்றி வெடித்து சிதறக்கூட வாய்ப்பிருக்கிறது.  எனவே நம்பகமான , மொபைல் பிராண்டுடன் தொடர்புடைய சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் .




 


அப்ளிகேஷன் பதிவிறக்கம்


ஆண்ட்ராய்ட்  பயனாளர்களாக இருந்தால்  Google Play Store இல் இருந்து மட்டுமே செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். மாறாக பிற தளங்களில் இருந்தோ அல்லது சில லிங்க்ஸை பயன்படுத்தியோ அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படியாக செய்தால் அது தீங்கிழைக்கும் வைரஸ்களை மொபைலில் புகுத்திவிடும். இது ஹேங்கிங், ஹேக்கிங் உள்ளிட்ட பிரச்சனைகளை உண்டாக்குவதோடு , மொபைலின் ஆயுட்காலத்தை பகுதியாக குறைத்துவிடும். அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்களில் இருந்து ஆப்ஸைப் பதிவிறக்குவது சிறந்த வழி, ஏனெனில் இந்தப் பயன்பாடுகள் பட்டியலிடப்படுவதற்கு முன் கடுமையான ஸ்கிரீனிங் செயல்முறையை மேற்கொள்கின்றன.


இயங்குதள அப்டேட்


உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் அவ்வபோது பாதுகாப்பு நலன் கருதி , அப்டேட்டை நிறுவனங்கள் கொடுக்கும் . அதனை தவறாமல் அப்டேட் செய்ய வேண்டும் .  இது ஹேக்கிங் மற்றும் தீங்கிழைக்கும் வைரஸிடம் இருந்து உங்களது மொபைலை பாதுகாக்கும்.


பழைய அப்ளிகேஷனை பயன்படுத்தாதீர்கள்


நீங்கள் மொபைலின் பயன்படுத்தும் ஒவ்வொரு செயலிகளுக்கும் குறிப்பிட்ட சில கால இடைவெளியில் புதுப்பித்தல் வழங்கப்படுகிறது .அதனை முறையாக அப்டேட் செய்ய வேண்டும்.இந்தப் புதுப்பிப்புகள் மிகவும் முக்கியமானவை மற்றும் அவற்றைப் புறக்கணிப்பது உங்கள் சாதனங்களை மால்வேர் தாக்குதல்களுக்கு ஆளாக்கும். இது ஸ்மார்ட்போன்களை செயழிக்க செய்யும் அல்லது மெதுவாக செயல்பட வைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


பொது வைஃபை பயன்படுத்துதல்


பொது வைஃபை நெட்வொர்க்குகள் மலிவானவை மற்றும் அணுக எளிதானவை, இருப்பினும், இந்த நெட்வொர்க்குகள் ஒரு பெரிய பாதுகாப்பு அபாயமாக இருக்கலாம். இந்த நெட்வொர்க்குகளுடன் இணைக்கப்பட்டுள்ள ஹேக்கர்கள் நீங்கள் பொது வைஃபை மூலம் பகிரும் தகவல்களை எளிதாக அணுகலாம். எல்லா சூழலிலும் மொபைல் நெட்வொர்க்கை பயன்படுத்துங்கள் . சில தவிர்க்க முடியா தருணங்களில் நீங்கள் பொது வைஃபையை பயன்படுத்த வேண்டிய நிலை வந்தால் அப்போது VPN ஐ பயன்படுத்துகிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  VPNகள் பொது நெட்வொர்க்குகளில் கூட இணையதளங்களை பாதுகாப்பாக இணைக்க எளிதான தீர்வாக இருக்கும் என கூறப்படுகிறது.





மொபைல் கவர்..


என்னதான் நாம் மொபைலை மேற்ச்சொன்ன வழிகளில் பாதுகாத்தாலும் , மொபைல் உடையாமல் பாதுகாப்பது மிக அவசியம் அல்லவா. அதற்கு மொபைல் வாங்கிய உடனேயே டெம்ப்ரெட் கிளாஸை பயன்படுத்துவது அவசசியம் . அதே போல பின்பக்கம் பாதுகாப்பிற்கான கேஸை பயன்படுத்தவும் தவறாதீர்கள்.அழகு என்பதை தாண்டி பாதுகாப்பான கேஸினை பயன்படுத்துவது அவசியம்.  அப்போதுதான் தவறுதலாக உங்களது மொபைல் கீழே விழுந்து உடைந்தால் அதனை பாதுகாக்க முடியும்.