மாஸ்டர் படத்தின் பாலிவுட் உரிமை யாருக்கு

இந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கும்  மாஸ்டர் திரைப்படத்தின் உரிமை வாங்குவதில் கடும் போட்டி நிலவுகிறது.

Continues below advertisement

 

Continues below advertisement

தமிழில் கடந்த பொங்கல் அன்று வெளியான இளைய தளபதி விஜயின் சூப்பர் ஹிட்  திரைப்படம்  மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த இந்தப்  படம் தற்பொழுது இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது .

சல்மான் கான் படத்தில் நடிக்கலாம் என்று பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டு இருக்கிறது . இந்த படத்தின் உரிமையை பெறுவதில் பாலிவுட் மிகுந்த ஆர்வம் காட்டி  வருகிறது . ஏற்கனவே படம் ஹிந்தியில் டப்பிங் செய்து நெட்ஃபிக்ஸ்யில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது .

கொரோனா காலத்தில் சினிமா ரசிகர்களை மீண்டும் திரைக்கு அழைத்து வந்த படம் இளைய தளபதி விஜயின்  " மாஸ்டர் " பாடல் வெளியான நாட்களில் இருந்தே படத்தின் எதிர்ப்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே . படம் வெளியாகி " வாத்தி  கம்மிங் " பாடல் உலகம் முழுவது கொண்டாடப்பட்டது . பாலிவுட் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை இந்த பாடல் கொண்டாடப்பட்டது . 


இந்நிலையில் , இந்த வெற்றியை பாலிவுடில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டி வந்தனர் . லோகேஷ் கனகராஜின் முந்தய படங்களான மாநகரம் , கைதி படங்களும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது . மாஸ்டரின் உரிமையை பெற  தயாரிப்பாளர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறதாம். விரைவில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட மாஸ்டர் படக்குழு திட்டமிட்டுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola