தங்கத்தின் விலை அவ்வப்போது குறைந்தாலும், அதை ஈடு செய்யும் வகையில் மீண்டும் விலை உயர்ந்துவிடுகிறது. நேற்று சவரனுக்கு 1,120 ரூபாய் விலை குறைந்த தங்கம் இன்று  ஒரே நாளில் அதிரடியாக 1,600 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.

Continues below advertisement


குறைந்துவந்த நிலையில் அதிரடியாக கூடிய தங்கம் விலை


சமீப காலமாக, தங்கத்தின் விலை அன்றாடம் இருமுறை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, காலையில் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.


கடந்த வார இறுதியில், அதாவது 15-ம் தேதி தங்கத்தின் விலை ஒரு கிராம் 11,550 ரூபாயாகவும், ஒரு சவரன் 92,400 ரூபாயாகவும் இருந்தது. ஞாயிற்றுக் கிழமையான 16-ம் தேதி அதே விலையில் நீடித்தது.


இந்த வார தொடக்கத்தில், அதாவது 17-ம் தேதி தங்கத்தின் விலை சற்று குறைந்து, ஒரு கிராம் 11,540 ரூபாயாகவும், ஒரு சவரன் தங்கம் 92,320 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், 18-ம் தேதியான நேற்று தங்கத்தின் விலை  சவரனுக்கு 1,120 ரூபாய் குறைந்தது.


அதன்படி, ஒரு கிராம் 11,400 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 91,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் அதிரடியாக 1,600 ரூபாய் விலை உயர்ந்துள்ளது.


இன்றைய விலை என்ன.?


இன்று(19.11.25) காலை கிராமிற்கு 100 ரூபாய் விலை உயர்ந்து ஒரு கிராம் 11,500 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் சரியாக 92,000 ரூபாயாக விற்பனையானது.


இந்நிலையில், மாலையில் மீண்டும் கிராமிற்கு 100 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 11,600 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் விலை உயர்ந்து ஒரு சவரன் 92,800 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.


வெள்ளியின் விலையும் உயர்வு



இதேபோல், வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த வார இறுதி நாளில், அதாவது 15-ம் தேதி 175 ரூபாயாக இருந்த வெள்ளியின் விலை, 16-ம் தேதியும் அதே விலையில் நீடித்தது.


பின்னர் 17-ம் தேதி கிராமிற்கு 2 ரூபாய் குறைந்து கிராம் 173 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் கிராமிற்கு 6 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, வெள்ளி விலை இன்று காலை கிராமிற்கு 3 ரூபாய் ஒரு கிராம் 173 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.


இந்த நிலையில், மாலையில் கிராமுக்கு மேலும் 3 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 176 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.